[X] Close

சுதர்சன நாச்சியப்பனின் விமர்சனம் ஏற்புடையதல்ல: காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கருத்து


  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 05:36 am
  • அ+ அ-

பல்வேறு பிரதமர்கள் முயற்சி மேற்கொண்டும் முடியாத அயோத்தி பிரச்சினை, தற்போது அமைக்கப்பட்டுள்ள சமரசக் குழுவால் தீர்ந்துவிடுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்ததீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் 14 மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்தே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் மற்றும் எஸ்.ஏ. நசீர் ஆகியோர் கொண்ட புதிய அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த மாதம் 26-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கில் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காண நீதிமன்றம் விரும்புவதாகவும் இதுதொடர்பான உத்தரவை மார்ச் மாதம் பிறப்பிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி நேற்று முன்தினம் 3 பேர் கொண்ட சமரசக் குழுவை உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான 3 பேர் கொண்ட சமரசக் குழுவில், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பல ஆண்டுகளாக அயோத்தி பிரச்சினை தொடர்ந்து நீண்டு கொண்டே வருகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பல்வேறு பிரதமர்கள் இதுவரை முயற்சி மேற்கொண்டனர். ஆனால் முடிவு எட்டப்படவில்லை.

முதன்முறையாக 1986-ல் காஞ்சி சங்கராச்சாரியார் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்றார். ஆனால் முடிவு எட்டப்படவில்லை. 1990-ல் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது சமரசக் குழு அமைக்கப்பட்டு முதன்முதலாக பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.

ஆனால் இது தொடங்கப்பட்ட சில நாட்களுக்கு உள்ளாகவே வி.பி. சிங் தனது பிரதமர் பதவியை இழந்தார். அதைத் தொடர்ந்து சந்திரசேகர் பிரதமரானார். 1991-ம் ஆண்டின்போது பிரதமர் சந்திரசேகர், இப்பிரச்சினையைத் தீர்க்க சாமியார் சந்திராசுவாமி மூலம் முயற்சி மேற்கொண்டார்.

இந்துக்கள், முஸ்லிம் அமைப்புகளிடையே அவர் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்காக அப்போதைய உள்துறை அமைச்சர் சுபோத் காந்த் சகாய், உயர் அதிகாரக் குழு ஒன்றை அமைத்தார். இதில் அப்போதைய முதல்வர்கள் முலாயம் சிங் யாதவ், சரத் பவார், பைரோன் சிங் ஷெகாவத் ஆகிய 3 பேர் இடம்பெற்றிருந்தனர். ஆனால் இந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

1992-ல் பிரதமர் நரசிம்மராவ், சமரச முயற்சியைத் தொடங்கினார். இம்முறையும் சாமியார் சந்திராசுவாமிதான் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. மாறாக, கரசேவகர்கள் பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கினர். இதனால் பேச்சுவார்த்தை முற்றிலுமாக நின்றுபோனது.

இது நடந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2002-ல் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பேச்சுவார்த்தையைத் தொடங்க முயற்சி செய்தார். இதற்காக அயோத்யா மையம், பிரதமர் அலுவலகத்திலேயே உருவாக்கப்பட்டது. விஎச்பி, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மூத்த ஐபிஎஸ் அதிகாரி குணால் கிஷோர் இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் இதிலும் தோல்வியே ஏற்பட்டது.

2002-03-ல் காஞ்சி சங்கராச்சாரியார் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார். ஆனால் வெற்றி கிடைக்கவில்லை.

பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் இதற்கான முயற்சிகள் தொடங்காதபோதும், அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) புலக் பாசு, இதற்கான முயற்சியைத் தொடங்கினார். கையெழுத்து இயக்கம் ஒன்றையும் அவர் ஆரம்பித்தார். ஆனால் அவரது முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

தற்போது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின்போது, உச்ச நீதிமன்றத்தால் 3 பேர் கொண்ட சமரசக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சமரசக் குழு வெற்றிகரமாக பேச்சுவார்த்தையை நடத்தி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்று மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close