[X] Close

ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: சலுகையை நீட்டிக்க அமெரிக்காவுடன் இந்தியா பேச்சு


iran

  • kamadenu
  • Posted: 09 Mar, 2019 11:23 am
  • அ+ அ-

ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா அளித்த சலுகையை நீட்டிக்க வேண்டும் என இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது நாளொன்றுக்கு 3 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு சிறப்பு சலுகை அடிப்படையில் இந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகை மே மாதத்துடன் முடிவடைகிறது. இதை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று அமெரிக்காவுடன் இந்தியா பேச்சு நடத்தி வருகிறது.

ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதனிடையே இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அளித்துவந்த வரியற்ற சலுகையை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. இதனால் மொத்த ஏற்றுமதியில் இந்தியாவுக்கு இந்த சலுகை 560 கோடி டாலருக்கு கிடைத்துவந்தது. சலுகை ரத்து செய்யும் முடிவை அதிபர் ட்ரம்ப் எடுத்துள்ளார். ஆனாலும் இது செயல்பாட்டுக்கு வர 2 மாதங்கள் ஆகும்.

ஈரானிலிருந்து மாதம் 12 லட்சம் டன் அதாவது தினசரி 3 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி ஆகிறது. கடந்த நவம்பரில் அமெரிக்கா ஈரான் மீது சர்வதேச தடை விதித்தது.

இருப்பினும் ஈரானிலிருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளான சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, தாய்வான், துருக்கி, இத்தாலி, கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு எண்ணெய் இறக்குமதிக்கு சலுகை அளிக்கப்பட்டது. இந்த சலுகை மே 4-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த சலுகை குறித்து அனைத்து நாடுகளுடனும் பேசப் போவதாக அமெரிக்க எரிசக்தித் துறை செய்தித் தொடர்பாளர் வின்சென்ட் கம்பாஸ் தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close