[X] Close

மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடவில்லை; 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலை: கோவை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் பிரகடனம்


5-50

  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 05:16 am
  • அ+ அ-

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கல்பெட்டாவைத்தரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு மாவோயிஸ்ட் கும்பல் நுழைந்து, அங்கிருந்த தனியார் ரிசார்ட் ஊழியர்களை மிரட்டியுள்ளது. தகவலறிந்து வந்த கல்பெட்ட போலீஸார் ரிசார்ட்டை சுற்றிவளைத்தனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் ஜலீல் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், போலீஸாருடன் நடந்த மோதலில் 2 மாவோயிஸ்ட்கள் காயமடைந்திருக்கலாம் எனவும், அவர்கள் சிகிச்சைக்காக அருகே உள்ள மாவட்டங்களுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் போலீஸாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து, தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் இரு மாநில போலீஸாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில், கேரளாவை ஒட்டியுள்ள மீனாட்சிபுரம், வாளையாறு, ஆனைகட்டி, மாங்கரை உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் கண் காணிப்புப் பணியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், நக்ஸல் தடுப்புப் பிரிவினர், சிறப்பு காவல் படை போலீஸார் கேரள எல்லையை ஒட்டியுள்ள, காரமடை சரகத்துக்கு உட்பட்ட வனப் பகுதிகளில் நேற்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

ஆனைகட்டி, பில்லூர் அணை உள்ளிட்ட பகுதிகளிலும் ஆயுதமேந்திய போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், எல்லையோரம் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர். சந்தேகப்படும் வகையிலான நபர்களின் நடமாட்டம் இருந்தால், உடனடியாக போலீஸுக்குத் தகவல் தெரிவிக்குமாறும் கிராம மக்களிடம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close