[X] Close

தேர்வு வழிகாட்டி: விடுமுறைக்கும் விதிமுறை உண்டு


  • kamadenu
  • Posted: 23 Mar, 2019 17:03 pm
  • அ+ அ-

நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு வாரம் 3 நாட்கள் இயங்கும் புதிய விரைவு ரயில் சேவையை, மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று (8-ம் தேதி) தொடங்கி வைக்கிறார்.

கன்னியாகுமரி - சென்னை இடையே செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தினமும் கூட்டம் அலைமோதுவதும், அதிகமான பயணிகள் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதும் தொடர்கிறது.

இதனால், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில்கள் இயக்க வேண்டும் என, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலிடம், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.

இதைத்தொடர்ந்து, நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு வாரத்தில் 3 நாட்கள் இயங்கும் விரைவு ரயில் சேவை அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய விரைவு ரயில் (எண் 22657) தாம்பரத்தில் இருந்து திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்கள் இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.55 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தை வந்தடையும்.

மறு மார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து ரயில் (எண்.22658) செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மாலை 5 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 5.05 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ஊர்களில் நின்று செல்லும்.

அமைச்சர் நன்றி

இப்புதிய ரயில் சேவையை அறிவித்தமைக்கு, பிரதமர், ரயில்வே அமைச்சர் ஆகியோருக்கு பொன் ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார். இந்த விரைவு ரயில் சேவையை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று மாலை 3 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close