[X] Close

டோக்கன் கொடுத்து ஏமாற்றிய கூட்டம் பாஸ்புக் கேட்டு வந்துகொண்டிருக்கிறது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு


  • kamadenu
  • Posted: 23 Mar, 2019 10:50 am
  • அ+ அ-

இளைஞர்கள் மத்தியில் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக 25 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

தமிழக இளைஞர்கள் மத்தியில் விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும் வகையில் புரவலர்கள் மற்றும்ஆர்வலர்களைக் கொண்ட குழு அமைக்கலாம் என மாநில அரசுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் கடந்த பிப்.19-ல் கடிதம் எழுதியிருந்தார். இதன்படி குழுவின் உறுப்பினர்களாக அப்போலோ மருத்துவமனை டாக்டர் விஜய் ரெட்டி, ராம்கோ சிமென்ட் மேலாண் இயக்குநர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா, முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஸ்ரீகாந்த், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ.எம்.மூர்த்தி, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி-டாக்டர் ஆறுமுகம், கோவை கிருஷ்ணா பொறியியல் கல்லூரி தாளாளர் மலர்விழி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பாலிமர் டிவி மேலாண் இயக்குநர் கல்யாணசுந்தரம், வேல்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஐசரி கே.கணேஷ், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.எம்.கே.பொறியியல் கல்லூரி தலைவர் ஆர்.எஸ்.

முனிரெத்தினம், சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக இணைவேந்தர் ஆர்.பாலசுப்பிரமணியம், சென்னை வேலம்மாள் கல்வி நிறுவனங்கள் தாளாளர் எம்.வி.எம்.வேல்முருகன், மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த வி.வி.ஆர்.ராஜ்சத்யன், சென்னை ஆழ்வார்ப்பேட்டை ஆதவ் அர்ஜூனா, சென்னை எம்.ஆர்.சி.நகர் செந்தில் தியாகராஜன் ஆகியோரும் இக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவில்பட்டி நேஷனல் கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாசலம், விருதுநகர் ஏஏஏ பொறியியல் கல்லூரி தாளாளர் பி.கணேசன் பஞ்சுராஜன், சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழக இணைவேந்தர் மரிய ஜீனன் ஜான்சன், வேலூர் வி.டி.பல்கலைக்கழகம் ஜி.வி.செல்வம், ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்கள் செயலாளர் எஸ்.நந்தகுமார் பிரதீப், ஈரோடு பாரதி வித்யாலயா பள்ளி தாளாளர் வேலுமணி, ஈரோடு வெள்ளாளர் கலைக்கல்லூரி தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், கோவை பப்பிஸ் குரூப் மேலாண் இயக்குநர் எஸ்.கே.ஷரி ஆறுமுகம், சென்னை எம்ஓபி வைஷ்ணவா பெண்கள் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் அமுதா, சென்னை கோட்டூர்புரம் அக்னி பொறியியல் கல்லூரி தாளாளர் அக்னீஸ்வரன், கிருஷ்ணகிரி ரிம்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி வி.வி.மூர்த்தி ஆகியோரும் இந்த 25 பேர்கொண்ட குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

விளையாட்டு வீரர்கள் மேம்பாட்டுக்காக பல்வேறு விளையாட்டு பயிற்சி வசதிகள், அரசு சாரா நிறுவனங்கள், அமைப்புகளிடம் உள்ள பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை சிறந்த முறையில் பயன்படுத்த ஒருங்கிணைப்பு பணிகளை இக்குழு மேற்கொள்ளும். விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் சாதனை படைக்க ஏதுவாக உயர்தர மருத்துவ சிகிச்சை, உதவி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளும், திறமையான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு அரசு அல்லாத அமைப்புகள் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் ஊக்கத்தொகை வழங்க ஊக்குவிக்கப்படுகிறது.

பன்னாட்டு அளவிலான நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த உதவி புரியும். இக்குழு 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டப்படும். குழுவின் கருத்துக்கள், பரிந்துரைகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலரிடம் வழங்கும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close