[X] Close

குடியிருப்பு, தெருக்களில் கூட்டம், பேரணிக்கு தடை


  • kamadenu
  • Posted: 23 Mar, 2019 07:36 am
  • அ+ அ-

உ.பி.யின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் ரூ.131 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று முன்தினம் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சியில் உலகின் 11-வது பொருளாதார சக்தியாக இந்தியா இருந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 3-வது இடத்துக்கு இந்தியா முன்னேறும்.

இந்தியாவை ஊழலற்ற நாடாக பிரதமர் நரேந்திர மோடி மாற்றியுள்ளார். ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மோடி அரசு தொடங்கியுள்ளது. ஊழலற்ற இந்தியா என்ற கனவை நனவாக்கியுள்ளது. அன்பின் மொழியை தீவிரவாதிகளால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவேதான் இந்திய வீரர்கள் துல்லிய தாக்குதல் நடத்தி சிவ தாண்டவம் ஆடியுள்ளனர். பாலகோட் ஜெய்ஷ்-இ-முகமது முகாம் மீதான தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர். ஆனால் பாகிஸ்தான் உண்மையை மறைக்கிறது என்றார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் தியோரியா புறப்பட்டுச் சென்றார். அங்கு ரூ.71 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close