[X] Close

தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார் கலா: உயிரைக் கொடுத்து வேலை செய்வேன் என உருக்கம்


  • kamadenu
  • Posted: 01 Jan, 1970 05:30 am
  • அ+ அ-

பொள்ளாச்சியில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச வீடியோ எடுத்து, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த திருநாவுக்கரசு (27) என்பவரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஒரு கும்பல் கடந்த 6 ஆண்டுகளாக முகநூல், வாட்ஸ்அப் மூலம் இளம்பெண்களுடன் பழகி, அவர்களை காரில் அழைத்துச் சென்று, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தும், நகை, பணம் பறித்தும் வந்துள்ளது. இந்த கும்பலால் பொள்ளாச்சி மற்றும் கோவை நகரப் பகுதியில் உள்ள கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்கள், கல்லூரி பேராசிரியை, பெண் மருத்துவர் என 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில், இவர்களிடம் சிக்கி தப்பிய கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின்பேரில், 5 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சபரிராஜன்(25), சதீஸ்(28), வசந்தகுமார்(24) ஆகியோரை கடந்த 25-ம் தேதி கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளியான மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகன் திருநாவுக்கரசு தலைமறைவானார். முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பிருப்பதால், போலீஸார் திருநாவுக்கரசை பிடிப்பதில் மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதற்கிடையே, திருநாவுக்கரசு தன்னிலை விளக்கம் அளித்து வாட்ஸ்அப்பில் வெளியிட்ட 2 வீடியோக்களும் பரபரப்பை ஏற்படுத்தின.

டிஎஸ்பி ஜெயராம் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த 8 நாட்களாக திருநாவுக்கரசை போலீஸார் தேடிவந்தனர். இந்நிலையில், மாக்கினாம்பட்டியில் வைத்து எஸ்.ஐ ராஜேந்திர பிரசாத் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று காலை அவரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியது: தேடப்படுவதை அறிந்த திருநாவுக்கரசு தன்னிடமிருந்த 3 செல்போன்களையும் அணைத்து வைத்துவிட்டார். இதனால் திருநாவுக்கரசு இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதில் தொய்வு ஏற்பட்டது. அவரது பெற்றோர் எண்ணுக்கு வரும் அழைப்புகளை ஆய்வு செய்ததில், சேலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் இருந்து அழைப்பு வந்தது தெரியவந்தது.

அந்த பெண்ணுக்கு வரும் அழைப்புகளை ஆய்வு செய்ததில், ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து திருநாவுக்கரசு பேசியது உறுதியானது. இதையடுத்து தனிப்படையினர் ஆந்திரா விரைந்தனர். அதற்குள் திருநாவுக்கரசு திருப்பதியில் இருந்து பேருந்து மூலம் சேலம் வழியாக ஈரோடு வந்துள்ளார். பின்னர் தனியார் கால் டாக்ஸி மூலம் நேற்று காலை மாக்கினாம்பட்டி வந்துள்ளார். செல்போன் சிக்னல் மூலம் பின்தொடர்ந்து வந்த போலீஸார், மாக்கினாம்பட்டியில் அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பின்னரே முழு விவரமும் தெரியவரும் என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close