[X] Close

அதிமுக கூட்டணிக்கு வரவேற்கிறோம்: தேமுதிகவுக்கு அன்புமணி அழைப்பு


anbumani-about-dmdk

அன்புமணி ராமதாஸ்: கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 06 Mar, 2019 08:47 am
  • அ+ அ-

அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு தேமுதிகவை வரவேற்கிறோம் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், நேற்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்தார். ஒருமணி நேரத்துக்கும் மேல் நடந்த இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் அன்புமணி கூறியதாவது:

தருமபுரியில் கடந்த ஆண்டு செப்டம்பரில், காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கத்தில், 10 லட்சத்து 20 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். இவற்றை முதல்வரிடம் அளித்து, திட்டத்தை உடனடியாக அறிவிக்க வலியுறுத்தினோம். தருமபுரியில் சிப்காட் வரவேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. இதற்காக 1,200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. உடனடியாக சிப்காட்டை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இரு கோரிக்கைகளையும் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி சேர, தமிழகத்தின் நலன்சார்ந்த 10 கோரிக்கைகளை முன்வைத்தோம். அதில் முதல் கோரிக்கையான காவிரி டெல்டா, பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தினேன். குழு அமைப்பதாக முதல்வர் உறுதியளித்துள்ளார். பூரண மதுவிலக்கின் அடிப்படையில், உடனடியாக 500 மதுக்கடைகளை மூட வேண்டும். அடுத்த 2 ஆண்டுகளில் அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “தேமுதிக எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். வரவேண்டும் என்பதே எங்கள் எண்ணம்” என்று அவர் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close