[X] Close

சென்னையில் தேர்தல் பறக்கும்படை சோதனை: 9 கிலோ தங்கம், 59 கிலோ வெள்ளி,ரூ.30 லட்சம் பணம் பறிமுதல்


9-59-30

  • kamadenu
  • Posted: 22 Mar, 2019 13:05 pm
  • அ+ அ-

"சர்க்கரை நோயுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவுக்கு அல்வா கொடுக்கப்பட்டது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனை வராண்டா முழுவதும் ரத்தம் சிந்தியது எப்படி?" என அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினார்.

கள்ளக்குறிச்சியில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்களிடையே அவர் பேசியதாவது: எந்த இரட்டை இலை சின்னத்தின் மூலம் வெற்றி பெற்றோமோ, அந்த சின்னத்தை அழிப்பேன் என்பவருடன் கூட்டணி வைத்துக் கொண்டு துரோகம் இழைத்து கொண்டிருக்கிறார்கள்.

ஜெயலலிதா சாதாரணமாக இறக்கவில்லை. கிராமத்தில் படிக்காதவனைக் கேட்டால் கூட இதைச் சொல்வான். ஒருவரை சாகடிக்கவிஷம் கொடுக்க வேண்டியதில்லை. வெல்லம் கொடுத்தே சாகடிக்கலாம். இது கிராமத்தானுக்கும் தெரியும். அதைத்தான் இவர்கள் செய்துள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு கடுமையான சர்க்கரை நோய் இருக்கிறது என்று தெரிந்து, மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து, உயிருக்கு போராடி வரும் ஒருவருக்கு அல்வா கொடுத்திருக்கிறார்கள் என்றால் இவர்களை என்ன பண்ணலாம்? நோய் குறையாமல், முற்றி அவர்களை இயற்கையாக இறக்க வைக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கமாக இருந்திருக்கிறது. இப்படித் திட்டம் போட்டே ஜெயலலிதாவை நம்மிடம்இருந்து பிரித்து விட்டார்கள்.

நன்றாக குணமாகி உடல்நிலை தேறி வரும்போது ஒருவருக்கு எப்படி மாரடைப்பு வரும்? மாரடைப்புவந்தால் எப்படி மருத்துவமனை வராண்டா முழுவதும் ரத்தம் சிந்திஇருக்கும். நாங்கள் அன்று அங்கிருந்தோம். சிலரை விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்தால் உண்மை வெளிவரும். 'பல வாய்ப்புகள், வசதிகள், அதிகாரம் இருந்தும் அந்த அம்மாவ கொடுமையா இப்படி கொன்னுட்டாங்களே!' என அரசு உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் என்னிடம் கூறினார்.

ஜெயலலிதா ஆசி இருக்கும் வரை, தொண்டர் ஆதரவு இருக்கும் வரை அதிமுகவை அசைக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close