[X] Close

தொண்டர்களிடம் 4 மொழிகளில் பேசி அசத்திய அதிமுக வேட்பாளர்


4

  • kamadenu
  • Posted: 22 Mar, 2019 11:24 am
  • அ+ அ-

 

மோடி அரசு மீண்டும் பலத்துடன் வரும். பாலகோட் தாக்குதல் ராணுவ நடவடிக்கை அல்ல என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''இந்தியா பலமுறை வலியுறுத்தியும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

புல்வாமாவுக்குப் பிறகு பாலகோட்டில் நடந்தது ராணுவ நடவடிக்கை அல்ல. மக்களுக்கு எந்த ஆபத்தும் விளைவிக்காமல், தீவிரவாத முகாம்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல். தீவிரவாதத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து, இந்திய வெளியுறவுத்துறை செயலர் கொடுத்த அறிக்கைதான் இந்திய அரசின் நிலைப்பாடு.

அபிநந்தனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் விமானப் படையும் இணைந்து அவர் பணிக்குத் திரும்பும் நாளை முடிவு செய்வர். நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அரசு மீண்டும் பலத்துடன் வரும். ஒட்டுமொத்த இந்தியாவிலும் வெற்றி பெறுவோம்.

பாஜக- தமிழக கூட்டணி குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து சொல்வர். பாலகோட் தாக்குதல் குறித்து சாட்டிலைட் படங்கள் வெளியிடப்படுவது குறித்து இப்போது கருத்து சொல்லமுடியாது'' என்றார் நிர்மலா சீதாராமன்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close