[X] Close

நாளிதழ் அலுவலக எரிப்பு தொடர்பான சிபிஐ மேல்முறையீட்டு வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை தீர்ப்பு; அட்டாக் பாண்டி உட்பட 9 பேருக்கு 3 ஆயுள் தண்டனை: பாதிக்கப்பட்டோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு தர அரசுக்கு உத்தரவு


9-3-5

  • kamadenu
  • Posted: 22 Mar, 2019 05:42 am
  • அ+ அ-

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், பெண் மருத்துவர், குடும்ப பெண்கள், பணிக்குச் செல்லும் இளம் பெண்கள் என 100-க்கும் மேற்பட்ட பெண்களுடன் முகநூலில் பழகி காதலிப்பதாக கூறி, காரில் அழைத்துச் சென்று ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஒரு கும்பல் கடந்த 6 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளது.

இதுகுறித்து கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் வசந்தகுமார், சதீஷ், சபரிராஜன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். திருநாவுக்கரசு என்பவர் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில், நேற்று திருநாவுக்கரசு பேசுவதுபோல் ஒரு வீடியோ வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது.

அதில், 'என் மீது எந்த தவறும் இல்லை. வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். என் மீது தவறு இருப்பது நிரூபிக்கப்பட்டால் வழக்கு தொடர்ந்த பெண்ணின் கையாலேயே தண்டனையை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன். எனக்கு தொழில் ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பல எதிரிகள் உள்ளனர். அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. நாளை பொள்ளாச்சி வருகிறேன். போலீஸார் என்னை கைது செய்து விடுவார்கள்' என தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிஎஸ்பி ஜெயராமன் கூறும்போது, ‘தனிப்படையினர் திருநாவுக்கரசை நெருங்கிவிட்டனர். அவர் விரைவில் கைது செய்யப்படுவார்’ என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close