[X] Close

தமிழகத்தில் இதுவரை 48 பேர் மனு தாக்கல்


48

  • kamadenu
  • Posted: 22 Mar, 2019 05:34 am
  • அ+ அ-

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதைக் கண்டித்து, அவரது ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர்.

அதிமுகவில் தூத்துக்குடி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, இரண்டு மாவட்டங்களுக்கும் தனித்தனியாக மாவட்டச் செயலாளர்கள் கடந்த மார்ச் 1-ம் தேதி நியமிக்கப்பட்டனர். அதேபோல், திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்த,அமைச்சர் உடுமலை கே.ராதா கிருஷ்ணனை அப்பொறுப்பில் இருந்து நீக்கி அவருக்கு அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளராக, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் நியமிக்கப்பட்டார்.

முன்னதாக உடுமலை தொகுதியில் வென்ற பொள்ளாச்சி ஜெய ராமன், கடந்த 2016-ம் ஆண்டு பொள்ளாச்சி தொகுதியில் வெற்றி பெற்றார். பொள்ளாச்சி தொகுதி கோவையில் உள்ளது. உடுமலை தொகுதி திருப்பூரில் உள்ளது.

தற்போது, கோவை மாவட்டத் தைச் சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமனுக்கு, திருப்பூர் மாவட்டச்செயலாளர் பதவி வழங்கப்பட் டுள்ளது. இது அப்பகுதி அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள தாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதைக் கண்டித்து, கோவை அதிமுக மாணவரணி முன்னாள் செயலாளர் காளீஸ் வரன் தலைமையில், 200-க்கும் மேற்பட்டவர்கள், அண்ணா சிலையில் இருந்து நேற்று காலை ஊர்வலமாக வந்து ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தை முற்றுகை யிட முயற்சி செய்தனர்.

தகவலறிந்த போலீஸார், தடுப்புகள் அமைத்து அவர்களைத் தடுத்தனர். அதன்பின், அனைவரையும் அதிமுக அலுலகத் துக்குள் அனுப்பினர். இதையடுத்து அவர்கள், உடுமலை ராதாகிருஷ்ணனை மாவட்டச் செயலாளர் பதவியில் மீண்டும் நியமிக்க வலியுறுத்தி அதிமுக அலுவலகத்தில் மனு அளித்தனர். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ் ணன் ஆகியோர் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், கட்சியில் இருவருக்கும் இடையில் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. முன்னதாக கோவையில் நடந்த முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், இருக்கை ஒதுக்கியது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையில் நடந்த மோதல் சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், தற்போது மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் நடந்து வரும்போது, அதிமுகவில் இதுபோன்ற நிகழ்வு மீண்டும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close