[X] Close

கோடையின் தாக்கத்தால் வறண்டு வரும் காவிரி; மேட்டூர் அணை நீர்வரத்து 15 கனஅடியாக வீழ்ச்சி


heat

மேட்டூர் அணை: கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 04 Mar, 2019 10:06 am
  • அ+ அ-

கோடையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 15 கனஅடியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

தமிழகத்தின் குடிநீர் மற்றும் பாசனத் தேவையில் குறிப்பிடத்தக்க அளவினை பூர்த்தி செய்வது மேட்டூர் அணை. வற்றாத நதி என போற்றப்படும் காவிரியின் குறுக்கே 120 அடி உயரத்துக்கு நீரை தேக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணைக்கு ஆண்டு முழுவதும் நீர் வரத்து இருந்து கொண்டே இருக்கும்.

தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை காவிரியில் மிக அதிகளவு நீர் வரத்து காணப்படும். வட கிழக்கு பருவமழைக் காலத்தில் நீர் வரத்து குறைந்துவிடும். ஜனவரி தொடங்கி மே மாதம் வரையிலும் மேட்டூர் அணைக்கு குறைந்த அளவே நீர் வரத்து இருக்கும். மழைக்காலத்தில் மிக அதிகபட்சமாக விநாடிக்கு 2 லட்சம் கனஅடி வரை காவிரியில் நீர் வரத்து இருக்கும். கோடை காலத்தில் விநாடிக்கு 500 கனஅடிக்கும் குறைவாகவே நீர்வரத்து இருக்கும். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடக்கத்திலேயே நீர்வரத்து விநாடிக்கு 100 கனஅடியாக சரிவடைந்துவிட்டது.

கடந்த சில நாட்களாக நீர் வரத்து விநாடிக்கு 50 கனஅடிக்கும் குறைவாகவே இருந்தது. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 34 கனஅடியாக இருந்தது. இது நேற்று மேலும் வீழ்ச்சியடைந்து விநாடிக்கு 15 கனஅடியாக குறைந்தது. இதனிடையே, அணையில் இருந்து நேற்று முன்தினம் வரை விநாடிக்கு 2,500 கனஅடி நீர் குடிநீருக்காக காவிரியில் வெளியேற்றப்பட்டு வந்தது. இது பின்னர் விநாடிக்கு 1,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட, வெளியேற்றப்படும் நீரின் அளவு பன்மடங்கு அதிகமாக இருப்பதால், அணையின் நீர் மட்டம் நாளுக்கு நாள் வேகமாக சரிவடைந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் நேற்று காலை நிலவரப்படி 67.33 அடியாகவும், நீர் இருப்பு 30.45 டிஎம்சி-யாகவும் இருந்தது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close