[X] Close

மக்களவை தேர்தலில் மாநில கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றும்: வைகோ


vaiko-speech

  • கா.சு.வேலாயுதன்
  • Posted: 04 Mar, 2019 10:04 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் மாநில கட்சிகள்தான் அதிக இடங்களைக் கைப்பற்றும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.

மதிமுக தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று திண்டுக்கல் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக கூட்டணியில் தேமுதிக வருவது குறித்து எனக்குத் தெரியாது. அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் தோற்கும். திமுக கூட்டணி வெற்றிபெறும். மதிமுகவுக்கு தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

அகில இந்திய அளவில் பாஜக 130 இடங்களுக்கு மேல் வெற்றிபெற முடியாது. மாநிலக் கட்சிகள் அதிக இடங்களைக் கைப்பற்றும். மத்தியில் காங்கிரஸ், மாநில கட்சிகள் இணைந்த கூட்டணி அரசு அமையும் என்பது என்னுடைய நம்பிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close