[X] Close

கன்னத்தில் தட்டியது ஏன்?- பெண் பத்திரிகையாளருக்கு எழுதிய மன்னிப்புக் கடிதத்தில் ஆளுநர் விளக்கம்


tn-governor-apologizes-to-journo

  • பாரதி ஆனந்த்
  • Posted: 18 Apr, 2018 13:42 pm
  • அ+ அ-

பத்திரிகையாளர் சந்திப்பின்போது பெண் பத்திரிகையாளரை கன்னத்தில் தட்டியதாக சர்ச்சையில் சிக்கியுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சம்பந்தப்பட்ட பத்திரிகையாளருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் தனது நடவடிக்கை குறித்தும் விளக்கமளித்திருக்கிறார்.

அக்கடிதத்தின் விவரம் வருமாறு:
18.04.2018 தேதியிட்டு எனக்கு உங்களிடமிருந்து ஒரு இமெயில் வந்துள்ளது. நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பு முடியும் தருவாயில் நான் எழுந்து செல்லவிருந்த வேளையில் தாங்கள் ஒரு கேள்வி எழுப்பினீர்கள். எனக்கு அந்தக் கேள்வி மிகவும் பிடித்திருந்தது. அதற்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் எனது பேத்தி என நினைத்தே நான் தங்கள் கன்னத்தைத் தட்டினேன். 

40 ஆண்டுகாலமாக நானும் பத்திரிகையாளராக இருந்தேன் என்ற முறையிலேயே உங்களது பணித்திறனைப் பாராட்டும் வகையிலேயே அவ்வாறு செய்தேன்.
உங்கள் இமெயில் மூலம், நீங்கள் அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தேன். உங்கள் உணர்வுகளுக்கு மன்னிப்பளித்து நடந்த சம்பவத்துக்காக எனது வருத்ததையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். 
இதற்கு இமெயில் வாயிலாக நீங்கள் உங்கள் பதிலைத் தெரிவிப்பீர்கள் என நம்புகிறேன்"
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close