[X] Close

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா. கவுன்சிலில் அறிவிக்க வேண்டும்: அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் புதிய கோரிக்கை


pak-terrorist

  • kamadenu
  • Posted: 01 Mar, 2019 10:49 am
  • அ+ அ-

ஜெய்ஷ்-இ-முகமது (ஜேஇஎம்) தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதி யாக அறிவிக்க வேண்டும் என அமெ ரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் புதிய கோரிக் கையை முன்வைத்துள்ளன.

பாகிஸ்தானிலிருந்து செயல் படும் ஜேஇஎம் அமைப்பு இந்தியா வில் அவ்வப்போது தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு வழங்கி வருகிறது. மசூத் அசாரை தீவிரவாதிகள் பட்டிய லில் சேர்த்த இந்தியா, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண் டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சி லிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கு சீனா முட்டுக் கட்டை போட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 14-ம் தேதி காஷ்மீரில் ஜேஇஎம் அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிர வாதி நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, மசூத் அசாரை சர்வ தேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இவற்றுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. அதாவது எந்த ஒரு தீர்மானத்தையும் இந்த 5 நாடுகளும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே நிறைவேற்ற முடியும். இந்நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய 3 நிரந்தர உறுப்பு நாடுகள் சார்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் ஒரு புதிய கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதில், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை, பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதல் குழு 10 வேலை நாட்களுக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும். இதற்கு மற்ற 2 நிரந்தர உறுப்பு நாடுகளும் ஆதரவளிக்க வேண்டும். குறிப்பாக, பாகிஸ்தானின் நட்பு நாடாக உள்ள சீனா ஆதரவு அளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் 4-வது முறையாக இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2009-ம் ஆண்டு இந்தியா சார்பில் இதுபோன்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து 2016-ல் நடந்த பதான்கோட் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவும், பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் இதே கோரிக்கையை வைத்தன. 2017-ல் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை மீண்டும் இதே கோரிக்கைவை வைத்தன. ஆனால் ஒவ்வொரு முறையும் சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இதைத் தடுத்து விட்டது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஒரு தனி நபர் அல்லது ஒரு குழுவை சர்வதேச தீவிரவாதியாகவோ அல்லது அமைப்பாகவோ அறிவித் தால், அந்த நபர் அல்லது குழு வுக்கு ஐ.நா. உறுப்பு நாடுகள் எவ் வித நிதியுதவியும் எந்த வகையி லும் வழங்கக் கூடாது. மேலும் அந்த நபர் அல்லது அமைப்பின் நிதி சொத் துகள் மற்றும் பொருளாதார வளங் களை உடனடியாக முடக்க வேண் டும். சர்வதேச தீவிரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களுக்கு தங்கள் நாட்டு குடிமக்களோ வேறு ஏதே னும் அமைப்போ நிதியுதவி வழங்குவதைத் தடுக்க வேண் டும். தடை விதிக்கப்பட்ட நபர்கள் வேறு நாடுகளுக்கு செல்வதைத் தடுக்க வேண்டும். அவர்களுக்கு எந்த ஒரு நாடும் ஆயுதங்களை வழங்கக்கூடாது

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close