[X] Close

ஸ்டாலின் கண்ட கனவு கானல் நீரானது: திருப்பூரில் முதல்வர் பழனிசாமி விமர்சனம்


edapadi-speech

  • kamadenu
  • Posted: 01 Mar, 2019 09:37 am
  • அ+ அ-

திமுக தலைவர் ஸ்டாலின் கண்ட கனவுகள் அனைத்தும் கானல்நீராகிவிட்டதாக முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருப்பூர் மாநகரில் 4-வது குடிநீர் திட்டம், அம்ரூத் மற்றும் சீர்மிகு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) திட்டம் என ரூ.1875.47 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை முதல்வர் பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

திருப்பூரில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இந்த திட்டங்கள், மக்களுக்கு எளிதாகத் தெரியும் வகையில் காணொலியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், தொழிலாளர் நகரம் குட்டி ஜப்பான்போல் மாறும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுவரக் கூடிய எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின், 'தமிழகத்தில் எந்த திட்டமும் நிறைவேறவில்லை. அதிமுக ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி' என்கிறார்.

இன்றைக்கு இத்தனை திட்டங்களை நிறைவேற் றும் அரசு, மக்கள் விரோத அரசா?ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுஅதிமுக இருக்குமா என்று நினைத்தார். அதன்பின், இந்த ஆட்சி 10 நாட்கள், ஒரு மாதம், 6 மாதத்தில் முடியும் என கணக்குப் போட்டுக்கொண்டிருந்தார். இன்றைக்கு 2 ஆண்டுகளை பூர்த்தி செய்து, 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். இது, மக்களின் ஆதரவோடு செயல்படுகிற அரசு. மக்களுக் குத் தேவையான திட்டங்களை இல்லத்துக்கே கொண்டு சேர்க் கிறோம். திமுக ஆட்சியில் பல்வேறு இடங்களில் அடிக்கல்நாட்டி, திட்டங்களை அப்படியே விட்டு விட்டார்கள்.

2 ஆண்டுகளில் திருப்பூர்..

மத்திய, மாநில அரசுகள் இணைந்து சீர்மிகு நகரம் திட்டத்தின் (ஸ்மார்ட் சிட்டி) கீழ், பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2 ஆண்டுகள் கழித்து திருப்பூருக்கு வரும்போது, இது வெளிநாடா அல்லது திருப்பூரா என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.

மானிய விலையில் இருசக்கர வாகனம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி என, பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறோம். இவையெல்லாம் ஸ்டாலினுக்கு தெரியவில்லை ஊர், ஊராகச் சென்றாலும், தெரு, தெருவாக சென்றாலும் உங்களைப் பற்றி மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். ஸ்டாலின் கண்ட கனவுகள் அனைத்தும் கானல்நீர் ஆனது.

பொங்கலுக்கு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கி உள்ளோம். சிறு, குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ.6000 வழங்குகிறது. ஏழை தொழிலாளர்களுக்கு மாநில அரசு ரூ.2000 வழங்க உள்ளது. இத்திட்டம், வரும் 4-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதன்மூலமாக 60 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என்று பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close