[X] Close

தேர்தல் அச்சம் கொள்ளவேண்டியது கம்யூனிஸ்டுகள்தான் பாஜக அல்ல: எச்.ராஜா பதிலடி


only-cpm-has-to-fear-elections-not-bjp

  • பாரதி ஆனந்த்
  • Posted: 28 Feb, 2019 13:46 pm
  • அ+ அ-

மக்களவை தேர்தலை நடத்தவிடாமல் சீர்குலைக்கவே எல்லையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாஜகவை விமர்சித்த கொடியேறி பாலகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் பாஜகவின் எச்.ராஜா.

முன்னதாக நேற்று, கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன், ''தேர்தல் தேதியை அறிவிக்கும் முன், போர்ச் சூழலை உருவாக்க ஆர்எஸ்எஸ் திட்டமிட்டு வருகிறது. இதன்மூலம் தேர்தலை நாசப்படுத்த எண்ணுகிறது. மக்களவைத் தேர்தலில் தனது முடிவை பாஜக ஊகித்துவிட்டது. இதன்மூலம் அவசர நிலையை அமல்படுத்தி, தேர்தலை நிறுத்த முயல்கிறது" எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், இதற்கு தனது ட்விட்டர் வாயிலாக பதிலளித்துள்ள எச்.ராஜா, "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியே வான்வழித் தாக்குதலை வரவேற்றுள்ளார். கொடியேறி பாலகிருஷ்ணன் தனது பேச்சு மூலம் தான் ஒரு தகுதியில்லாத அரசியல்வாதி என்பதை நிரூபித்திருக்கிறார். எல்லையில் நடந்தது முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மட்டுமே. போரை நாங்கள் வேண்டி விரும்பவில்லை. அப்புறம் தேர்தல் அச்சம் தேர்தல் அச்சம் கொள்ளவேண்டியது கம்யூனிஸ்டுகள்தானே தவிர பாஜக அல்ல" என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close