[X] Close

புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட சிஆர்பிஎப் வீரர்களின் மனைவிகளுக்கு அரசு வேலை: பணியாணை வழங்கினார் முதல்வர்


  • முத்தலீப்
  • Posted: 27 Feb, 2019 17:56 pm
  • அ+ அ-

ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் மீது தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் காவல் படைவீரர்  ஜி.சுப்ரமணியனின் மனைவி கிருஷ்ணவேணிக்கும், அரியலூர் சிவசந்திரனின் மனைவி காந்திமதிக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் மீது தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில்,  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் ஜி.சுப்ரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் சி.சிவசந்திரன் ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்திய திருநாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், தமது இன்னுயிரை தியாகம் செய்த, மத்திய பாதுகாப்புப் படைவீரர்கள்

ஜி.சுப்ரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திற்கு இழப்பீடாக தலா இருபது லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்பட்டது.மறைந்த மத்திய பாதுகாப்புப் படைவீரர்கள் சுப்ரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று ஏற்கெனவே அறிப்விக்கப்பட்டிருந்த அடிப்படையில் ஜி.சுப்ரமணியனின் மனைவி, கிருஷ்ணவேணிக்கும், சிவசந்திரனின் மனைவி காந்திமதிக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

 

இந்த நிகழ்வின்போது, அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, கடம்பூர் ராஜு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close