[X] Close

மதுரை அதிமுகவில் யாருக்கு ‘சீட்’ கிடைக்கும்? - ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணி நிர்வாகிகள் இடையே போட்டி


ops-eps-team

கோபாலகிருஷ்ணன்

  • kamadenu
  • Posted: 27 Feb, 2019 12:50 pm
  • அ+ அ-

தென் மாவட்டத்தில் மதுரை மக்களவைத் தொகுதி அதிமுகவுக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த தொகுதியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆதிக்கம் செலுத்தின. கடந்த 2 மக்களவைத் தேர்தல்களில் திமுக, அதிமுக அடுத்தடுத்து வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மதுரையில் மு.க.அழகிரி வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார். 2014-ம் ஆண்டு அதிமுகவில் கோபாலகிருஷ்ணன் தற்போது எம்பியாக உள்ளார். அவர் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்து வமனையைக் கொண்டுவர டெல்லியில் பாஜகவினருடன் இணைந்து பல காரியங்களை செய்துள்ளார். பொதுமக்களிடம் நெருக்கமாக இல்லாவிட்டாலும், ஒரு எம்.பி.யாக தொகுதிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை கோபாலகிருஷ்ணன் செய்துள் ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அதிமுகவில் மதுரை தொகுதி ‘சீட்’ கேட்டு கோபாலகிருஷ்ணன் எம்.பி., மாநில தகவல் தொழில் நுட்ப இணைச் செயலாளர் ராஜ் சத்தியன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் ரமேஷ், மாவட்டப் பொருளாளர் ராஜா, பகுதி செயலாளர் ஜெய வேல், சோலைராஜா, எஸ்.டி.ஜெயபாலன், எம்ஜிஆர் மன்ற மாநில துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் விண்ணப் பித்துள்ளனர்.

மதுரை தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்படும்பட்சத்தில் இவர்களில் கோபாலகிருஷ்ணன் எம்.பி., ராஜ் சத்தியன், வழக்கறிஞர் ரமேஷ், எம்எஸ் பாண்டியன் உள்ளிட்டவர்களில் ஒருவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப் படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர் செல்வம், சசிகலா அணியை விட்டு வெளி யேறும்போது அவருடன் சேர்ந்து கோபாலகிருஷ்ணன் எம்.பி. முதல் ஆளாக வெளியேறினார். அதனால், கோபாலகிருஷ்ணனும், ஓ.பன்னீர் செல்வமும் மிக நெருக்கமாக உள்ளனர்.

ஆனால், அவருக்கு உள்ளூர் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மாவட்ட செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் ஆதரவு இல்லை. அதனால், எம்.பி.க்கு வாய்ப்பு வழங்கினாலும் இவர்கள் ஒத்துழைப்பு கோபால கிருஷ்ணனுக்கு கிடைக்குமா? என்பது தெரியவில்லை.

மதுரை முன்னாள் மேயரும், புறநகர் மாவட்டச் செய லாளருமான விவி.ராஜன் செல்லப்பா தனது மகனும் மாநில தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளருமான ராஜ் சத்தியனுக்கு ‘சீட்’ பெற்றுத்தர முதல்வர் கே.பழனிசாமி மூலம் காய் நகர்த்தி வருகிறார். இதற்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூவும் ஆதரவாகச் செயல்படுகிறார். முன்பு செல்லூர் கே.ராஜூவும், ராஜன் செல்லப்பாவும் எதிரும், புதிருமாக செயல்பட்டனர். தற்போது ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக இவர்கள் ஒன்றாக கைகோர்த் துள்ளனர்.

மகனுக்கு ‘சீட்’ கிடைக்கா தபட்சத்தில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ரமேஷூக்கு பெற்றுக் கொடுக்க ராஜன் செல்லப்பா ஆர்வம் காட்டுகிறார். ஆர்.பி.உதயகுமார் தற்போது வரை இந்த விஷயத்தில் மவுனமாக இருக்கிறார். அவர் முதல்வர் கே.பழனிசாமியிடம் மற்ற இருவரைக் காட்டிலும் மிக நெருக்கமாக இருப்பவர். அதனால், மதுரை தொகுதி வேட்பாளரைத் தேர்வு செய்வதில் ஆர்.பி.உதயகுமாரின் பங்கும் முக்கியமானதாக இருக்கும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close