[X] Close

வீட்ல யாரும் பெரியவங்க இல்லைல.. மாணவிகளுக்கு வலை விரித்த கல்லூரி பேராசிரியையின் பேச்சு


college-teacher-lures-girl-students-suspended

  • பாரதி ஆனந்த்
  • Posted: 16 Apr, 2018 11:49 am
  • அ+ அ-

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தியதாக எழுந்த புகாரையடுத்து, பேராசிரியையை ஒருவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் மாணவிகளிடம் பேசியது இதுதான்...

வீட்ல யாரும் பெரியவங்க இல்லைல.. 
4 பேரும் இருக்கீங்கல்
நான் யுனிவர்சிட்டி வரேன்னு உங்களுக்கு எல்லாம் தெரியும்தான்
இங்க வந்து பெரிய ஹைய அஃபீஷியல்
இதுல எல்லோரோட சீக்ரஸியும் முக்கியம். ஏன் கண்ணா..
நான் சொல்லவர விஷயம் ரொம்ப ரொம்ப சீக்ரெட்டா இருக்க வேண்டியது.
நம்ம இதுவரைக்கும் டீச்சர் - ஸ்டூடண்ட் ரிலேஷன்சிப்ல இருந்திருக்கோம்
அடுத்த லெவல் போறதுக்குன்னா ஆப்பர்சூனிட்டி வருது. வருதுன்னு சொல்றப்ப
(ஸ்பீக்கர்ல போடு.. )
ஆப்பர்சூனிட்டி வரும்போது சில விஷயம் நாம சீக்ரெட்டாதான் பண்ண வேண்டியிருக்கு.
அந்த அளவுக்கு பெரிய அஃபிஷியல்ஸ். அதுக்கு என்னால அசூரன்ஸ் கொடுக்க முடியும்.
உங்க 4 பேரையும் பெரிய லெவல் கொண்டு செல்ல முடியும். எந்தவித தடையும் இல்லாமலும் செய்ய முடியும்.
இப்ப நாங்க என்ன மேம் செய்யணும்.
ஆன்... நீங்க என்ன செய்யணும்னா, "சில விஷயங்கள சக்சஸ்புல்லா முடிக்கிறதுக்கு அவங்க காலேஸ் ஸ்டூடண்ட்ஸ சில விஷயங்களுக்காக எதிர்பார்க்கிறாங்க..
இது வரைக்கு நான் அந்த லெவல்க்கு எறங்குனது இல்ல.
நான்.. இந்த அளவுதான் என்னால சொல்ல முடியுது.
சில விஷயங்கள்னு சொல்றது நீங்க புரிஞ்சுப்பீங்க நினைக்கிறேன்.
ரொம்ப நாளா இத ஏன் கிட்ட கேட்டுக்குட்டு இருக்காங்க
நானும் நாகராஜ் சாரும் ஒரு தடவ ஓடி..ல (ஆன் ட்யூட்டி) பேப்பர் வேல்யூஷன் போணோம் தெரியுமா?
அப்பதான் அவங்க ஏங்கிட்ட ரொம்ப ரெக்வெஸ்ட் பண்ணி கேட்டாங்க..
நம்ம காலேஜோட சூழ்நிலை தெரியும் எனக்கு.
இங்கவந்து அவுங்க சில அசூரன்ஸ் சொல்லியிருக்காங்க
அத பேஸ் பண்ணி நான் உங்கள பெரிய லெவல் கொண்டு செல்வேன்.
இன்னும் 1.5 மாசத்துல பிராக்டிக்கல்ஸ் முடிஞ்சிடும்.
அதனால்தான் நான் உங்ககிட்ட இந்த விஷயத்த ஷார்ப்பா பேச முடியுது.
உங்க தியரி பேப்பர்ல கைவைக்காம பார்த்துக்க முடியும்.
பினானிசியலாகவும் அகெடமிக்கலாகவும் நல்ல சப்போர்ட் இருக்கும்.
இத நீங்க வெளிய 4 பேருக்கு தெரியாத அளவுக்கு..
அதாவது உங்க அப்பா அம்மாவுக்கு சொல்லி செய்வீங்களா சொல்லாம செய்வீங்களா அது அப் டூ யூ
உங்க பேர்ல அக்கவுண்ட் பண்ணி பணத்தை போட்டுவிட்ருவேன்.
நீங்க தெர்ட் இயர் முடிச்ச பிறகு என்ன பண்ணப் போறீங்க தெரியல.
ஆனா.. உங்களுக்கு நான் என்ன ப்ளான் வச்சிருக்கேன்னா
இந்த ஸ்கீமுக்குள்ள நீங்க வந்தீங்கன்னா உங்களுக்கு எம்கேயூ பேக் போனாக இருக்கும்.
யுனிவர்சிட்டிலிருந்து ஃபெல்லோஷிப் வாங்கித்தர முடியும்.
ஃபெலோஷிப் பண்ணுவ, மன்த்லி இன் கமு இருக்கும்
பிஜி ரெகுலர் கிளாஸ் அட்டெண்ட் பண்ண வேண்டாம்.
(எல்லாரும் கவனிச்சிட்டு இருக்கீங்களா?)
எங்களுக்கு இஷ்டமில்ல மேம்
நாங்க கவர்மென்ட் எக்ஸாம் எழுதப்போறோம்
எம்எஸ்சியே நாங்க படிக்கப்போகல மேம்
வேணாம் மேம் இஷ்டமில்ல.
டிஎன்பிஎஸ்சி எக்ஸாம் எல்லாம் கூட ஓவர்கம் பண்ண முடியும்.
நீங்க குழந்தைகங்கடா.
நீங்க இன்னும் கொஞ்சி யோசிங்க.
(இதப்பத்தி இதுக்குமே;அ பேச வேண்டாம் மேம்)
பேச வேணான் சொல்றீங்களா? ஓகேடா நான் கம்பெல் பண்ணல..)
இதப் பத்தி வெளிய பேசிக்க வேணாம்.
அதான் மெயின் திங்
நீங்க இன்னும் யோசிங்க.
இன்னிக்கு என்ன வியாழக்கிழமை 
இன்னும் ரெண்டு நாள்கூட யோசீங்க
அவுங்ககிட்ட நான் நெக்ஸ்ட் வீக்தான் பேசுறேன்
நான் காரணம் இல்லாமல் கேட்கல
இருங்கடா... இருங்கடா.. இருங்கடா.. நீங்க இன்னும் யோசிங்கடா
(இல்ல மேம் எத்தன முறை கேட்டாலும் இதான் பதில்)
இந்த ஆப்பர்சூனிட்டி அவ்ளோ ஈசியா வராது.
இதுக்காக நான் உங்க மார்க்ஸ்ல எல்லாம் கை வைக்கமாட்டேன்.
நீங்க தெளிவா சொல்லுங்க.
ஒரு ஆப்பர்சூனிட்டி வந்தது.
இதவே நான் ரொம்ப நாளா யோசிச்சி யோசிச்சி கேக்கவா வேணாமா கேக்கவே வேணாமாங்குற டைலமால்லதான் கேட்டேன்.
இப்ப நெக்ஸ்ட் வீக் அவுங்களுக்கு ஒரு இம்பார்டன்ட் அசைன்மென்ட் இருக்குபோல..
அதுக்குதான் அர்ஜ் பண்றாங்க
அந்த அர்ஜ்லதான் இந்த ரெக்யர்மென்ட் இப்ப ஸ்டார்ட் பண்றேன்.
இல்லைன்னா நீங்க தெர்ட் இயர் முடியற வரைக்கும் உங்ககிட்ட இத ஓபன் பண்றதா இல்ல.
என்னையவே நிறைய டெஸ்ட் பண்ணிட்டாங்க.
அப்ப ரொம்ப ரொம்ப பெரிய அபிஷியல்ஸ்
எதுவும் சாதிக்க முடியும் என்பதால்தான் நான் இத ஒங்களுக்கு சஜஸ்ட் பண்றேன்.
என்னை நிறைய முறை ஸ்பெஷியலைசேஷன் பண்ணியிருக்கங்க.
உங்களுக்கு நான் கவர்னர் வர வீடியோல அனுப்பியிருந்தேன்ல.
அந்த லெவலுக்கு மூவ் பண்ற அளவுக்கு எனக்கு இங்க அலவன்ஸ் இருக்கும்.
இப்ப நான் என்று சொல்லிட்டேன்னா நீங்க எனக்கு அசூரன்ஸ் கொடுக்கணும்
நம்ம மட்டும் தனியா இருக்க சந்தர்ப்பம் நெறைய இருந்துச்சு
அப்பகூட நான் ஓபன் பண்ணல
என்னால் சர்வைவ் பண்ண முடியும்
நெலமைய மாத்த முடியும்னு நம்பிக்கை இருக்கு.
இதுக்காக நான் யாரையும் பனிஷ் பண்றது என்னுடைய லெவல் கிடையாது
கூட உங்களுக்கு வழித்துணைக்கு கூப்பிடுறேன்
உங்கள கைத்தூக்கிவிட விரும்புறேன்
இந்த காலத்துல நான் பேசவர விஷயம் வந்து ரொம்ப ரொம்ப ஆர்டினரியான விஷயம்
ரொம்ப ரொம்ப பாசிடிவா ஹேண்டில் பண்ணப்போறோம்
(எங்களுக்கு வேணாம் மேம். எத்தனை முற கேட்டாலும் இதான் பதில் மேம்)
நீங்க இண்டிவிஜுவலா திங்க் பண்ணி சொல்லுங்க
(இல்ல மேம் இதப்பத்தி இதுக்கு மேல பேச வேணாம். இஷ்டம் இல்ல விட்டுடுங்க)
சரி இதப்பத்தி யார்கிட்டையும் பேசக்கூடாது
(இல்ல மேம் அதெல்லாம் சொல்ல மாட்டோம்)
எனக்குவந்து அசூரன்ஸ் வேணும்.
ஐ வில் பிலீவ் யூ ஆல். 
நான் வந்து சேட்டர்டே வரை வெயிட் பண்றேன்.
பை..

யார் இந்த நிர்மலா தேவி?
அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாகப் பணியாற்றி வருபவர் நிர்மலாதேவி. இவர், தன்னிடம் படிக்கும் மாணவிகளை பல்கலைக்கழக பெயரைக் கூறி பாலியல் தொழிலுக்கு வற்புறுத்திய ஆடியோ அண்மையில் வெளியானது. இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் குறிப்பிட்ட பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி நிர்வாகத்திலும் மாணவிகள் புகார் அளித்தனர்.

இதுகுறித்து, அக்கல்லூரியின் செயலர் ராமசாமி நேற்று அளித்த பேட்டி: பாலியல் வற்புறுத்தல் குறித்து கல்லூரி மாணவிகள் புகார் அளித்தனர். இதுகுறித்து 3 மூத்த பேராசிரியர்களைக் கொண்டு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு கூறினேன். அவர்களும் அறிக்கை அளித்தார்கள். அதன்பின் பேராசிரியை நிர்மலாதேவி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குற்றச்சாட்டு குறித்து அவர் பதில் அளித்தபின் விசாரணை கமிஷன் அமைக்கப்படும். அதன்பின் சட்டப்பூர்வமான நடவடிக்கை தொடரும். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவிகளின் நலன் கண்டிப்பாக பாதுகாக்கப்படும் என்றார்.
 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close