[X] Close

சென்னைக்கு அருகில் கண்ணகி நகரில் ரூ.250-க்கு திருநங்கைகளுக்கு வாடகைக்கு வீடு ஒதுக்கீடு; 225 பேருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்


ops

தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தால், ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் அவசர சுனாமி மறுகுடியமர்வு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 2,048 புதிய வாடகை குடியிருப்புகளில் 255 திருநங்கையர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்குவதன் அடையாளமாக, தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 14 திருநங்கையர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை நேற்று வழங்கினார்.

  • kamadenu
  • Posted: 27 Feb, 2019 10:15 am
  • அ+ அ-

கண்ணகி நகரில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியகுடியிருப்பில் 255 திருநங்கை களுக்கு ரூ.250 வாடகையில் வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வழங்கினார்.

இது தொடர்பாக நேற்று வீட்டு வசதித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால், சென்னைக்கு அருகில் ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில், ‘அவசர சுனாமி மறு குடியமர்வு’ திட்டத்தின் கீழ், 2 ஆயிரத்து 48 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகளில் 255 திருநங்கைகளுக்கு புதிய வாடகை குடியிருப்புகள் ஒதுக்கப் பட்டுள்ளன. இவர்களில் 14 திருநங்கைகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.

சமூக நலத் துறையால் சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் திருநங்கைகள் என கண்டறியப்பட்டு, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தகுதிவாய்ந்த 255 திருநங்கைகளுக்கு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணையின்படி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் வாடகை முறையில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு பன்னோக்கு அறை, படுக்கை அறை, குளியலரை, கழிப்பறை மற்றும் குடிநீர், மின் வசதிகள் உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

புதிய வாடகை வீட்டுக்கான ஆணைகளை பெற்றுக் கொண்ட திருநங்கைகள், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றி தெரிவித்தனர். நிகழ்வின்போது, வீட்டுவசதித் துறையின் செயலர் ச.கிருஷ்ணன், குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநர் ம.சு.சண்முகம் உள்ளிட்டோர் இருந்தனர்.

விதிமுறைகள்

இந்த வாடகை குடியிருப்புதொடர்பான ஒதுக்கீட்டு ஆணை யில் கூறப்பட்டிருப்பதாவது: மாத வாடகை ரூ.250. பராமரிப்புத் தொகையாக ரூ.250-ஐ மாதம் 10-ம் தேதிக்குள் குடிசை மாற்று வாரியத்துக்குச் செலுத்த வேண்டும். மேலும், முன்னதாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த குடியிருப்புக்கு ரூ.1000 அதாவது 4 மாத வாடகை முன்வைப்புத் தொகையாக வாரியத்துக்கு செலுத்த வேண்டும். 3 மாதங்கள் தொடர்ந்து வாடகை செலுத்தாவிட்டால் ஒதுக்கீட்டு ஆணை ரத்து செய்யப்படும். அதுவரை கட்டிய வாடகை தொகையும் பறிமுதல் செய்யப்படும். ஒதுக்கீட்டுதாரர்கள் குடியிருப்பில் மின்வசதிகளை செய்து கொள்ள விரும்பினால் எஸ்டேட் அலுவலரிடம் தடையின்மைச் சான்று பெற்று தங்கள் செலவிலேயே மின் வசதி செய்துகொள்ள வேண்டும்.

மின் கட்டண ஏற்பாடுமின் கட்டண தொகையை குடியிருப்பின் ஒதுக்கீட்டுதாரரே செலுத்த வேண்டும். ஒதுக்கீட்டுதாரர் குடியிருப்பில் வசிக்கும் மற்ற நபர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. ஆணை பெற்ற ஒரு மாதத்துக்குள் முன்பணம் செலுத்தி குடியிருப்பில் குடியேற வேண்டும். ஒதுக்கீட்டுதாரர் குடியிருப்பில் தொடர்ந்து வசித்து வருவதை ஊர்ஜிதம் செய்த பின்னர் நிரந்தர ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.

முன்னதாக ஒதுக்கீட்டுதாரர் குடியிருப்பை வேறு நபருக்கு விற்கவோ, வசிக்க அனுமதிக்கவோ, வாடகைக்கு விடவோ கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close