[X] Close

சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடித்துவைப்பு: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு


tamilnadu-assembly

  • kamadenu
  • Posted: 27 Feb, 2019 10:14 am
  • அ+ அ-

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரை முடித்துவைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2016-ம்ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் முடிந்ததும் 15-வது சட்டப்பேரவை உருவாக்கப்பட்டது. இந்த சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதன்பின், 2-வது கூட்டத்தொடர் 2017 ஜனவரி 23-ம் தேதியும் 3-வது கூட்டத்தொடர் 2017-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதியும் தொடங்கியது. 4-வது கூட்டத் தொடர் கடந்தாண்டு ஜன.8-ம் தேதியும் 5-வது கூட்டத்தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதியும் தொடங்கி நடந்தது.

இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் மற்றும் 6-வது கூட்டத் தொடர் கடந்த ஜன.2-ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. அதன்பின் தொடர்ந்து 5 நாட்கள் அதாவது ஜன.8-ம் தேதி வரை நடந்தது. அதன்பின், தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக பிப்.8-ம் தேதி பேரவை மீண்டும் கூடியது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் பிப்.14-ம் தேதி வரை 5 நாட்கள் நடந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் மற்றும் 15-வது சட்டப்பேரவைக்கான 6-வது கூட்டத்தொடரை முடித்துவைத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிக்கை பிப்.26-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவை செயலர் கே.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close