[X] Close

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 46 மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்


srilankan-war

  • kamadenu
  • Posted: 27 Feb, 2019 10:13 am
  • அ+ அ-

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 46 மீனவர்களையும், 26 மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 9-ம் தேதி நாகப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து திரிகோணமலையில் சிறைவைத்துள்ளனர். கடந்த 2 மாதங்களில் ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 42 மீனவர்கள் 9 வெவ்வேறு சம்பவங்களில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோல தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பது துரதிருஷ்ட வசமானது. மீனவர்களை சிறைபிடிப்பதால் அவர்களது குடும் பத்தினர் சொல்லொணா துயரத்துக்கு உட்படுவதுடன், அக்குடும்பங்கள் வறுமையிலும் சிக்குகின்றன.

இந்திய – இலங்கை இடையே1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் அரசியலமைப்புச் சட்டப்படிசெல்லத்தக்கதல்ல என உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மேற்கண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்து பாக் ஜலசந்தியில் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை மீட்டுத் தர வேண்டும்.

மேலும், தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 26 படகுகள் நீண்டகாலமாக இலங்கை அதிகாரிகள் வசம் இருப்பதால் அவை சேதமடைந்து வருகின்றன. எனவே, நீண்டகாலமாக இருந்து வரும் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். தூதரக அளவில் உடனடியாக நடவடிக்கை எடுத்து 46 மீனவர்களையும், 26 மீன்பிடி படகுகளையும் மீட்க வெளிவிவகாரத் துறை அமைச்சகத்துக்கு தாங்கள் அறிவுறுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close