[X] Close

ரஷ்யாவில் தீவிபத்துக்குள்ளான கப்பலில் சென்ற தமிழக மாலுமியின் நிலை என்ன?- தகவல் கிடைக்காமல் பரிதவிக்கும் பெற்றோர்


russia-ships

  • kamadenu
  • Posted: 26 Feb, 2019 09:58 am
  • அ+ அ-

ரஷ்யாவில் கப்பல்கள் தீப்பிடித்து எரிந்த விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த மாலுமியின் நிலையைஅறிய முடியாமல் அவரது பெற்றோர்கள் தவித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தசேகர். இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் இந்திய ராணுவ வீரராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அல்லிராணி, மதுக்கூர் வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.

இவர்களின் மகன் அவினாஷ்(24), கோவையில் பி.டெக்., மரைன் இன்ஜினீயரிங் படித்துவிட்டு, மும்பையில் உள்ள சரக்குக் கப்பல் நிறுவனம் ஒன்றில் மாலுமியாக பணியாற்றி வந்தார்.

இவர் பணியில் இருந்த ‘மேஸ்ட்ரோ' என்ற கப்பல் கடந்த ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி மும்பையில் இருந்து துருக்கி நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றது. கடந்தஜனவரி 21-ம் தேதி ரஷ்யா அருகேகெர்ச் ஜலசந்தி பகுதியில் ‘மேஸ்ட்ரோ' கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிபொருளை பரிமாற்றும் பணிநடைபெற்றது. அப்போதுஎதிர்பாராதவிதமாக தீப்பற்றியதில் 2 கப்பல்களும் எரிந்து நாசமாயின.

இந்தத் தீவிபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். ஆனால், அவினாஷ் என்னவானார் என்பதுகுறித்த எந்தத் தகவலும் தெரியவரவில்லை.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை வாயிலாக தகவல் எதுவும் கிடைக்கப் பெறாததால் அவினாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக பரிதவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அவினாஷின் தந்தை ஆனந்தசேகர் கூறியபோது, “என் மகனைப் பற்றிய எந்தத் தகவலும் எங்களுக்குத் தெரியவில்லை. மத்திய, மாநில அரசு அதிகாரிகளும் என் மகனின் நிலைகுறித்த தகவல்களை தெரிவிக்கவில்லை. இது எங்களை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகனின் நிலைமை குறித்துஅறிய, உயர் நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அவினாஷ் எங்களுக்குக் கிடைப்பான் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்” என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close