[X] Close

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம்


naam-tamilar-katchi-campaign

  • kamadenu
  • Posted: 23 Feb, 2019 13:05 pm
  • அ+ அ-

மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே திண்டுக்கல் நகரில் பல இடங்களில் தங்கள் சின்னத்தை வரைந்து தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

மக்களவைத் தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைக்க பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், தனித்துப் போட்டி என முன்பே முடிவு செய்துவிட்ட நாம் தமிழர் கட்சி, தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 இடங்களில் பாதி தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப் படுவார்கள் என அறிவித்துள்ளது.

இதில் திண்டுக்கல் தொகுதி ஆண் வேட்பாளருக்கு என அறிவிக்கப்பட்டு, வேட்பாளரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மற்ற கட்சிகள் எல்லாம்கூட்டணி இறுதி செய்யப்படாத காரணத்தால், யார் போட்டியிடப் போகிறார்கள் என தெரியாமல் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டது. திண்டுக்கல் நகர், புறநகர் பகுதிகளில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் என அந்த கட்சியின் சின்னத்தை வரைந்து, கட்சியின் வாக்குறுதிகளையும் எழுதி வாக்கு கேட்டு சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர். வேட்பாளர் பெயர் எழுத வேண்டிய இடத்தில் மட்டும் இடைவெளிவிட்டு சீமானின் தம்பி என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் தொகுதி கூட்டணியில் உள்ள எந்த கட்சிக்கு ஒதுக்கப்படும், அதன் பின் பிரச்சாரத்தைத் தொடங்கலாம் என அதிமுகவினர் மற்றும் திமுக வினர் காத்திருக்கும் நிலையில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் நாம் தமிழர் கட்சியினர் சின்னங்களை வரைந்து பிரச்சாரத்தை மேற்கொள்வதில் முந்தி விட்டனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close