[X] Close

திமுக எம்.பி. கனிமொழியை எதிர்த்து தூத்துக்குடியில் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டி? - 5 தொகுதி பட்டியல் அமித்ஷாவிடம் ஒப்படைப்பு


tamilnadu-soundararajan-contest-on-behalf-of-the-bjp-in-thoothukudi

  • kamadenu
  • Posted: 23 Feb, 2019 11:15 am
  • அ+ அ-

பாஜகவுக்கு வழங்கப்படும் 5 தொகுதிகளின் உத்தேசப் பட்டியலை அமித்ஷாவிடம் அதிமுகநேற்று வழங்கியது. இதில் தூத்துக்குடி இடம் பெற்றுள்ளதால் திமுக எம்.பி. கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடும் வாய்ப்புள்ளதாகக் கட்சியினர் தெரிவித்தனர்.

18 மக்களவைத் தொகுதி பாஜக பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக பாஜக தேசிய தலைவர் அமித்ஷாநேற்று மதுரை வந்தார். அதிமுகவுடன் கூட்டணி உறுதியான பின்னர் அமித்ஷா முதல்முறையாக தமிழகம் வந்ததால், அவரை அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாஜக நிர்வாகி ஒருவர் கூறியதாவது:அதிமுக சார்பில் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் உத்தேசத் தொகுதிப் பட்டியல் நேற்று அளிக்கப்பட்டுள்ளது. அதில், வடசென்னை, சிவகங்கை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. சிவகங்கையில் கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, கன்னியாகுமரியில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கோயம்புத்தூரில் சி.பி.ராதாகிருஷ்ணன் அல்லது வானதி சீனிவாசன், தூத்துக்குடியில் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது.

மதுரையில் பாஜக போட்டி

தூத்துக்குடியில் திமுக சார்பில் எம்.பி. கனிமொழி போட்டியிடுவது உறுதி என்ற தகவலால், அவரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, தமிழிசை சவுந்தரராஜனை அங்கு போட்டியிட வைக்க கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. வடசென்னைக்குப் பதிலாக தென்சென்னை கேட்கப்பட்டது. இதற்கு அதிமுக ஒத்துக்கொள்ளாததால், மதுரை தொகுதி கேட்கப்பட்டுள்ளது. அங்கு பாஜக மாநில செயலாளர் ஆர்.ஸ்ரீனிவாசனை போட்டியிட வைக்க திட்டமிட்டே இந்த ஒரு தொகுதியை மட்டும் மாற்றித்தருமாறு அதிமுகவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது உத்தேசப் பட்டியல் மட்டுமே என்பதால் ஒரு தொகுதி யில் மாற்றம் வர வாய்ப்புள்ளது என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close