[X] Close

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையும்: தமிழிசை சவுந்தரராஜன் உறுதி


admk-coliation

  • kamadenu
  • Posted: 23 Feb, 2019 10:49 am
  • அ+ அ-

அதிமுக-பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும் என்ற நம்பிக்கை உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா 18 மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகம் முழுவதும் "தாமரை தீபம்" எனும் நிகழ்ச்சி வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தமிழக பாஜக மண்டல தலைவர்கள் 600 பேருக்கு வரும் 28-ம் தேதி காணொலி காட்சிமூலம் ஆலோசனை வழங்குவார்.

அதிமுக, பாஜக, பாமக கூட்டணி பிரம்மாண்டமான கூட்டணியாகவும், தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டணியாகவும் அமைந்துள்ளது. எங்களது கூட்டணியில் தேமுதிக விரைவில் இணையும் என நம்பிக்கை உள்ளது. பாஜக தனித்து விடப்படும், தமிழகத்தில் காலூன்றாது எனக் கூறி வந்த கட்சிகளுக்கு மத்தியில் வலுவான கூட்டணியை தமிழகத்தில் அமைத்துள்ளோம்.

திமுக இழுபறியில் உள்ள கூட்டணி. அன்பால் இணைந்த கூட்டணியைப் பார்த்து சிலர் பதற்றப்படுகிறார்கள் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close