[X] Close

சென்னை மாநகராட்சியில் அறிவியல் முறையில் அழிக்கப்படும் குப்பைகள் 400 டன்னாக உயர்வு


the-debris-to-be-destroyed-is-400-tons

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 23 Feb, 2019 09:42 am
  • அ+ அ-

சென்னை மாநகராட்சியில் இயற்கை உரம் தயாரித்தல், சமையல் எரிவாயு தயாரித்தல் போன்ற அறிவியல் முறைகளில் அழிக்கப்படும் குப்பைகளின் அளவு 400 டன்னாக உயர்ந்துள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் தினமும் 5 ஆயிரத்து 400 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. இப்பணியில் 19 ஆயிரத்து 158 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் குப்பைகளில் மக்கும் குப்பைகள் மக்கா குப்பைகள் என வகை பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் அறிவியல் முறையில் இயற்கை உரம், சமையல் எரிவாயு தயாரிக்கவும், அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படும் குப்பைகளின் அளவு குறைகிறது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கை காரணமாக தற்போது அறிவியல் முறையில் அழிக்கப்படும் குப்பைகளின் அளவு அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:கடந்த ஆண்டு சுமார் 200 டன் குப்பைகள் இயற்கை உரமாகவும், எரிவாயுவாகவும் மாற்றப்பட்டு வந்தன. தற்போது மக்கும் குப்பைகள் 176 மையங்களில் இயற்கை உரம், எரிவாயுவாகவும், மின்சக்தியாகவும் மாற்றப்பட்டு வருகிறது.

இயற்கை உரமாக்க..

மேலும் அதிக அளவு குப்பைகளை உற்பத்தி செய்யும் ஹோட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, உணவு மற்றும் சமையலறை கழிவுகளை, அவர்களது இடத்திலேயே இயற்கை உரமாக மாற்ற அறிவுறுத்தி வருகிறோம். பலர் இதில் ஆர்வமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் அப்பகுதியில் இருந்து வெளிவரும் குப்பைகளின் அளவு குறையத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் மாநகராட்சி பகுதியில் அறிவியல் முறையில் அழிக்கப்படும் குப்பைகளின் அளவு 400 டன்னுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close