[X] Close

கொளத்தூரில் அனிதா நீட் பயிற்சி கூடம்: மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


anita-neet-training-hall-in-kolathur

  • kamadenu
  • Posted: 22 Feb, 2019 11:39 am
  • அ+ அ-

கொளத்தூரில் அரியலூர் மாணவி அனிதா பெயரில் அமைந்த நீட் பயிற்சி கூடத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான ஸ்டாலின், நேற்று தனது தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பயணம் செய்து மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். நலத் திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கொளத்தூரில் ரூ. 38 லட்சத்தில் கட்டப்பட்ட இறகுப் பந்து, கைப்பந்து ஆடுகளம் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி அலுவலகத்தில் ஏழைகளுக்கு மருத்துவ உதவி, திருமண உதவி, தையல் இயந்திரம், மீன்பாடி வண்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார்.

கொளத்தூர் பகுதியில் உள்ளமாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் பெயரில், அனிதா அச்சீவர்ஸ் அகாடமி என்ற பயிற்சி கூடத்தையும் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர், ஜி.கே.எம் காலனியில் ரூ.40 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்ட மயான பூமி மேம்பாட்டுப் பணிகள், ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் கூடுதல் வகுப்பறை கட்டிடம்,ரூ.45 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட மதுரைசாமி மடம் விளையாட்டு மைதானத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close