[X] Close

தமிழகம், புதுவையில் சில தினங்களுக்கு வறண்ட வானிலை


dry-weather-in-tn-puducherry

  • kamadenu
  • Posted: 22 Feb, 2019 11:03 am
  • அ+ அ-

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் தற்போது மழை இல்லாதது, காற்றில் ஈரப் பதம் குறைந்தது, வானில் மேகங்கள் இல்லாதது போன்ற காரணங்களால் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே குமரிக்கடல் முதல் வட கர்நாடகத்தின் உள் பகுதி வரை, தமிழகத்தின் உள் பகுதி வழியாக காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது.

இருப்பினும் தமிழகம், புதுச்சேரி யில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்.

வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடும்படியாக எங்கும் மழை பதிவாகவில்லை. குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாக இருக்கும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close