[X] Close

திமுக தனித்து போட்டியிட தயாரா?- அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சவால்


dmk-is-ready-to-compete-separately

புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மதுரை ஐராவதநல்லூரில் நடந்த கூட்டத்தில் பேசினார் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

  • kamadenu
  • Posted: 19 Feb, 2019 13:48 pm
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிடத் தயாரா? என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சவால் விடுத்தார்.

மதுரை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் மற்றும் மக்களவைத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் ஐராவதநல்லூரில் நடைபெற்றது. புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.

இதில் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பேசியதாவது:

எப்போது தேர்தல் வந்தாலும் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகதான் வெற்றிபெறும். கருணாநிதி யாலேயேஅதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஸ்டாலினால் என்ன செய்ய முடியும்?. அதிமுக ஜனநாயக முறைப்படி செயல்படுகிறது. திமுகவில் ஸ்டாலின் சர்வாதி காரியாகச் செயல்படுகிறார். திமுகவுக்கு செல்வாக்கு கூடி விட்டது என்று சொல்லும்ஸ்டாலின், ஏன் கூட்டணிக்கு முயற்சிக்கிறார். திமுக தனித்து நிற்கத் தயாரா? மீத்தேன் திட்டத்தைக் கொண்டு வந்தது யார்?, கெயில் கேஸ் லைனைக் கொண்டு வந்தது யார்?, பாஜகவை மதவாதக் கட்சி என்று சொல்கிறீர்களே ஏன் நீங்கள் பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லையா?.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் விருதுநகர் தொகுதி எம்.பி. ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் சரவணன், நீதிபதி, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close