[X] Close

சாலையில் தவித்த 3 வயது சிறுவனை ஒரு மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்த பெண் காவலர்


3-year-old-boy-who-was-on-the-road

  • kamadenu
  • Posted: 19 Feb, 2019 13:32 pm
  • அ+ அ-

சேலத்தில் சாலையில் தவித்த 3 வயது சிறுவனை ஒரு மணி நேரத்தில் பெண் காவலர் பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

சேலம் அன்னதானப்பட்டியை அடுத்த தாதகாப்பட்டியில் நேற்று காலை சாலையோரத்தில் 3 வயது சிறுவன் பெற்றோரை தேடி அழுதபடி நின்றிருந்தான். இதை பார்த்த ஒருவர் அக்குழந்தையை அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் குமார், பணியில் இருந்த பெண் காவலர் கலைவாணியை அழைத்து, சிறுவனிடம் வீட்டுக்கு செல்லும் வழியை கேட்டுப் பார்க்க கூறினார்.

இதையடுத்து, கலைவாணி தனது இருசக்கர வாகனத்தில் சிறுவனை அமர வைத்து அவனது ‘வீட்டுக்கு போகும் வழியை கேட்டார். சிறுவன் கை காட்டிய திசையில் வாகனத்தை ஓட்டிச் சென்றார். இறுதியாக, தாதகாப்பட்டி வழிவாய்க்கால் மாரியம்மன் கோயில் அருகே சென்றபோது, அங்கு அந்த சிறுவனின் பெற்றோர் தங்கள் மகனை காணவில்லை என அழுதபடி இருந்தனர்.

கலைவாணி அவர்களிடம் விசாரித்தபோது, அன்னதானப் பட்டி வழிவாய்க்கால் மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், கோகிலா தம்பதி என்பதும், கலைவாணியுடன் இருந்த சிறுவன் தங்கள் மகன் கோகுல்ராஜ் (3) என தெரி வித்தனர்.மேலும், பொது சுகாதார வளாகத்துக்கு சிறுவனுடன் சென்றபோது, சிறுவனை வெளியில் அமர வைத்துவிட்டு உள்ளே சென்ற நேரத்தில் சிறுவன் அங்கிருந்து சென்றது தெரிந்தது. பாலகிருஷ்ணன், கோகிலா தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 4-வதாக கோகுல்ராஜ் பிறந்ததுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. தம்ப தியை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து அவர்களுக்கு அறிவுரை கூறி சிறுவனை அவர் களிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

பெற்றோரை பிரிந்த ஒரு மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெற்றோரிடம் சிறுவனை ஒப்படைந்த காவலர் கலைவாணியை மாநகர காவல் ஆணையர் சங்கர் பாராட்டினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close