[X] Close

என் வாழ்வின் மகிழ்ச்சியான நாள்: வைகோ உருக்கம்


vaiko-speech

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 19 Feb, 2019 08:41 am
  • அ+ அ-

ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து நேற்று தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியது:

ஸ்டெர்லைட் ஆலையை மூட கடந்த 22 ஆண்டு காலமாக போராட்டம் நடைபெற்று வந்தது. இந்த ஆலையை மூட வேண்டும் என்று நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஸ்டெர்லைட் ஆலையில் சுற்றுச்சூழல் விதிகள் மீறப்பட்டுள்ளதாக உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வாதிட்டேன். இதனால் தற்போது நீதி வென்றுள்ளது. இந்த தீர்ப்பால், நீதிபதிகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளது.

பணத்தால் அரசியல் கட்சிகளை விலைகொடுத்து வாங்கிய ஸ்டெர்லைட் ஆலை, இன்று நீதியின் முன்பு மண்டியிட்டுள்ளது. எனது வாழ்க்கையில் இந்த நாள் மகிழ்ச்சியான நாள்.

முகிலன் என்கவுன்ட்டர்?

சென்னையில் இருந்து கடந்த 15-ம் தேதி இரவு நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த சமூக ஆர்வலர் முகிலனை காணவில்லை. அவரை ஒருவேளை என்கவுன்டர் செய்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது. இதற்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும், போலீஸாரும்தான் காரணம் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close