[X] Close

அமித் ஷா இன்று சென்னை வருகை அதிமுக- பாஜக கூட்டணி அறிவிப்பு?


bjp-amitshah

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 19 Feb, 2019 08:39 am
  • அ+ அ-

அதிமுக - பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி யிருப்பதால் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக தீவிரம் காட்டி வந்தது. கடந்த சில மாதங்களாக திரைமறை வில் அதிமுக - பாஜக தலைவர் கள் பேச்சு நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி திடீரென சென்னை வந்த மத்திய ரயில்வே அமைச்சரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான பியூஷ் கோயல், அதிமுக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோருடன் பேச்சு நடத்தினார்.

இரவு 10 முதல் 1 மணிவரை சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின்போது, அதிமுக - பாஜக கூட்டணி அமைவ தால் ஏற்படும் சாதக பாதகங்கள், ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதி கள், பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சி களை கூட்டணியில் சேர்ப்பது என பல்வேறு விஷயங்களைப் பற்றி ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

பியூஷ் கோயல் நடத்திய பேச்சுவார்த்தையின்போது உடன் இருந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்த ரராஜன் ஆகியோர், அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று காலை 11 மணியளவில் சென்னை வர இருப்பதாக அக்கட்சியின் மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் தெரிவித்தார். அதிமுக - பாஜக கூட்டணியும், தொகுதிப் பங்கீடும் முடிவு செய்யப்பட்டு விட்டதாவும், அதனை அறிவிப் பதற்காகவே அமித்ஷா சென்னை வரவிருப்பதாகவும் கூறப்படு கிறது. அவருடன் மத்திய அமைச் சர் பியூஷ் கோயலும் சென்னை வருகிறார். அமித் ஷா வருகையை யொட்டி முதல்வர் பழனிசாமி தனது இல்லத்தில் நேற்று இரவு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதால் அதற்குள் கூட்டணியை அறிவிக்க வேண்டும் என்பதில் அமித் ஷா தீவி ரம் காட்டி வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். அதன்படி மகா ராஷ்டிர மாநிலத்தில் பாஜக - சிவ சேனா கூட்டணி நேற்று அறிவிக்கப் பட்டது. அதிமுக - பாஜக கூட்டணி யில் பாமக, தேமுதிக ஆகிய கட்சி களை இணைக்கவும் இரு கட்சி களும் பேசி வருவதாகவும், அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close