[X] Close

டெல்லியிலிருந்து வாரணாசி செல்லும் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் மோடி


pm-flags-vande-bharat-train

  • kamadenu
  • Posted: 16 Feb, 2019 16:44 pm
  • அ+ அ-

டெல்லியிலிருந்து வாரணாசி செல்லும் அதிவேக வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

டெல்லியில் இருந்து வாரணாசிக்கு வந்தே பாரத் ரயில் இன்று முதல் பயணத்தைத் தொடங்குகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளாக நமது உண்மையான கடின உழைப்பின் மூலம் ரயில்வே துறையை மேம்படுத்த முயற்சித்திருக்கிறோம். இந்த ரயிலை வடிவமைத்த இன்ஜினீயர்களுக்கு வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ரயில் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் 18 மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ளது பெருமை யாக இருக்கிறது.

இவ்வாறு மோடி பேசினார்.

வந்தே பாரத் ரயில், டெல்லியில் இருந்து வாரணாசிக்கு 9 மணி 45 நிமிடங்களில் சென்றடையும். வழியில் கான்பூர், அலகாபாத் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நிற்கும்.

வந்தே பாரத் ரயில் மணிக்கு அதிகபட்சமாக 160 கி.மீ. வேகத்தில் செல்லும். சதாப்தி ரயிலில் உள்ளதை விட கூடுதல் வசதிகளுடன் வந்தே பாரத் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் 17-ம் தேதி முதலாக, வாரத்துக்கு 5 நாட்கள் இயக்கப்படும். இந்த ரயிலில் 16 பெட்டிகள் குளிர்சாதன வசதிகள் கொண்டவை. மொத்தம் 1,128 பேர் இதில் பயணம் செய்யலாம்.

தானியங்கி கதவுகள், ஜிபிஎஸ் அடிப்படையில் ஒலி, ஒளி தகவல் அறியும் வசதி, வை-பை வசதி உட்பட பல்வேறு அதி நவீன வசதிகள் இந்த ரயிலில் உள்ளன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close