[X] Close
 

காவிரிப் போராளிகளை வணங்குவோம்: சத்யராஜ் 


sathyaraj-hails-cauvery-protesters

  • பாரதி
  • Posted: 12 Apr, 2018 16:06 pm
  • அ+ அ-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி களத்தில் நின்று போராடும் போராளிகள் நம்மைவிட வீரத்திலும் தியாகத்திலும் உயர்ந்தவர்கள். அவர்கள் போற்றுதலுக்குரியவர்கள் என நடிகர் சத்யராஜ் கூறியிருக்கிறார்.
காவிரி போராளிகளை சிலர் விமர்சித்துவரும் நிலையில், சத்யராஜ் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர்,


வணக்கம் 
எல்லோருக்கும் ஒரு குடும்பம் இருக்கு
அந்தக் குடும்பத்த காப்பாத்துவதற்காக வருமானத்தை நோக்கிய பயணம் இருக்குது
நமக்காக போராடுற போராளிகளுக்கும் அப்படிப்பட்ட குடும்பமும் இருக்கிறது வருமானத்தை நோக்கிய பயணமும் இருக்குது
ஆனா ஒரு பொதுநலத்துக்காக சுயநலம் கருதாமல்
குடும்பத்தை மறந்து வருமானத்தைத் துறந்து
நமக்காக போராடுற போராளிகள் எவ்வளவு உயர்ந்தவர்கள் அப்படின்னு நாம் நிச்சயமாக நினைச்சுப் பார்க்கணும்.
ஏன்னா அப்படி களத்தில் இறங்கி போராடும்போது, கைது செய்யப்படலாம், வழக்கமான வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்பதைத் தெரிந்தும்.. ஒரு பொதுநலத்துகாக அவர்கள் போராடுகிறார்கள்.
இன்று அவர்களுடைய போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்பதற்காக நடந்துகொண்டிருக்கிறது.
அந்தப் போராட்டக்களத்தில் நிற்பவர்கள் நம்மைவிட மிகவும் உயர்ந்தவர்கள்.
அவர்களுடைய தியாகத்தையும் வீரத்தையும் நான் வாழ்த்துகிறேன் என்று சொல்லவரவில்லை
ஏன்னா பொதுவா இப்ப எல்லோரும் சொல்றாங்க இல்லையா.. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அப்படின்னுட்டு
அதுக்கு காரணம் என்னென்னா.. வாழ்த்துவதற்கு நாம யார வாழ்த்துறோமோ அவர்களுக்கு நம்மைவிட வயது அதிகமாக இருக்க வேண்டும்
அப்போதுதான் நாம் அவர்களை வாழ்த்த முடியும். இல்லையென்றால் வணங்க வேண்டும்.
இந்தப் போராட்டக் களத்தில் நிற்கும் போராளிகள் நம்மைவிட என்னைவிட வீரத்திலும் தியாகத்திலும் உயர்ந்தவர்கள்
அதனால் அவர்களை நாம்/நான் வாழ்த்த முடியாது. போற்ற முடியும், வணங்க முடியும்
அவர்களை நான் போற்றுகிறேன் வணங்குகிறேன்.
நன்றி.. வணக்கம்.

எனக் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


[X] Close