[X] Close

ஒசூர், நாகர்கோவில் மாநகராட்சியாக மாற்றம்: குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டம் நிறைவேறியது


hosur-nagercoil-corporation

  • kamadenu
  • Posted: 15 Feb, 2019 08:20 am
  • அ+ அ-

ஒசூர், நாகர்கோவில் நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்றுதல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தொடர்பான அபராதம் தொடர்பான சட்டம் மற்றும் சட்டத்திருத்தங்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் நேற்று நிறை வேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் ஒசூர், நாகர்கோவில் நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்றும் சட்ட மசோதாக்கள், மாநக ராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை சேமித்தல், பகிர்ந்தளித்தலுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிப்பதற்கான சட்டத்திருத்த மசோதாக்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார்.

மேலும் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்ட முன்வடிவை அமைச்சர் கே.பி,அன்ப ழகன், வேளாண் விளைபொருள் விற்பனை ஒழுங்குபடுத்துதல் சட்டத்திருத்தம், வேளாண் விளை பொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணை தொழில் மற்றும் சேவைகள் சட்ட மசோதாக்களை அமைச்சர் இரா. துரைக்கண்ணுவும் தாக்கல் செய்தனர். இந்த சட்ட மசோதாக்கள், திருத்த சட்ட மசோதாக்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப் பட்டன.

முன்னதாக தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்ட முன் வடிவு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, திமுக உறுப்பினர் ரகுபதி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர் பேசும்போது, “மாணவர்கள் நலன் கருதி, இந்த சட்டத்தில் பல்கலைக்கழக மானியக்குழுவின் 2003-ம் ஆண்டு சட்டத்தின் கூறு களையும் இணைக்க வேண்டும். அப்போதுதான், தனியார் பல் கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் பெறும் சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்படும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்த உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்,‘‘ இது நிகர்நிலை பல்கலைக்கழகத்துக்கான சட்டமல்ல; தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகத்துக்கு அனுமதியளிப்பதற்கான சட்டம். பல்கலைக் கழக மானியக்குழுவின் 2003-ம் ஆண்டு சட்டத்தை பின்பற்றி பல்வேறு விதிமுறைகள் சேர்க்கப் பட்டுள்ளன. சரியாக செயல்படாத பல்கலைக்கழகங்களின் அங்கீ காரத்தை ரத்து செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 24 மாநிலங் களில் 288 தனியார் பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.

2 பல்கலை.க்கு அனுமதிதமிழகத்தில் 2 பல்கலைக் கழகங்களுக்கு முதல்வர் அனுமதிஅளித்துள்ளார். மேலும் பல பல்கலைக்கழகங்கள் வரும்போது மாணவர்களுக்கு உயர்கல்வி வசதி கிடைக்கும். மேலும், பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகளின் அங்கீகாரம் பெறப்படுவதால், இந்த பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் சான்றிதழ்கள் அங்கீகாரம் பெற்றதாக இருக்கும்’’ என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close