[X] Close

ஆளுக்கொருபுறம் அரசியலா?- வரலாறு நம்மை மன்னிக்காது: கோபிநாத்


gobinath-tweets-on-cauvery-issue

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Apr, 2018 08:58 am
  • அ+ அ-

காவிரி பிரச்சினை குறித்து விஜய் டிவி வர்ணனையாளர் கோபிநாத் கருத்து தெரிவித்திருக்கிறார். காவிரி போராட்டத்துக்காக பிரிந்து கிடப்பது வருத்தமளிப்பதாக அவர் கூறியிருக்கிறார். ஆளுக்கொருபுறம் பிரிந்து அரசியல் செய்தால் வரலாறு நம்மை மன்னிக்காது எனக் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்?-Whr r v heading? மிக ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரத்தில்,நாம் பிளவுபட்டுக்கொண்டே இருப்பது கவலையளிக்கிறது. காவிரிக்காக ஒன்றிணைந்து நிற்கவேண்டிய நேரமிது. பிரிந்து அல்ல. ஆளுக்கொருபுறம் அரசியலுக்காகவும், பெயரெடுப்பதற்காகவும் இந்தச்சூழலை பயன்படுத்தினால் வரலாறு நம்மை மன்னிக்காது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

#CMB என்ற ஹேஷ்டேக் கீழ் அவரை இதனை ட்வீட் செய்திருக்கிறார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close