[X] Close

பாஜக, பாமக, தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி பேச்சு- ஆர்.வைத்திலிங்கம் தகவல்


admk-alliance

  • kamadenu
  • Posted: 14 Feb, 2019 11:32 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து பாஜக, பாமக, தேமுதிக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக இன்னும் அறிவிக்கவில்லை. கூட்டணி குறித்து ரகசியமாக பேச்சுவார்த்தை நடப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித் திருந்தார். இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேற்று வந்திருந்த அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி.யிடம் ‘‘பாஜக, தேமுதிக, பாமக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறதா’’ என செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது: நீங்கள் கூறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. முடிந்ததும் அறிவிப்பு வெளியிடப்படும். கூட்டணி பேச்சுவார்த்தை ரகசியமாக நடப்பதாக, ஒருங்கி ணைப்பாளரும் முதல்வரும் கூறியுள்ளனர். முடிந்ததும் வெளிப்படையாக அவர்கள் அறிவிப்பார்கள். தேர்தல் தேதியே இன்னும் அறிவிக்கவில்லை. அதனால், கூட்டணி பேச்சில் தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். எங்க ளுக்கு எம்ஜிஆரால் அடையாளம் காட்டப்பட்ட எதிரி திமுக. துரோகி அமமுக. அவர்கள் இருவரும் எங்களுக்குத் தேவையில் லாதவர்கள். அவர்கள் தவிர யார் வந்தாலும் பேச்சுவார்த்தை நடத்த தடையில்லை’’ என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close