[X] Close

மக்களவை தேர்தல் பணிகளில் பாஜக தீவிரம்; அமித்ஷா இன்று ஈரோடு வருகை: மத்திய அமைச்சர்களும் தமிழகம் வருகின்றனர்


bjp-intensifies-in-lok-sabha-polls

அமித்ஷா

  • kamadenu
  • Posted: 14 Feb, 2019 09:17 am
  • அ+ அ-

பாஜக வாக்குச்சாவடி கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் இன்று தமிழகம் வருகின்றனர்.

மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் இரு வாரங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக பேச்சு நடத்தி வருகிறது. இந்நிலையில் மதுரை, திருப்பூரில் நடந்த பிரச்சார கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து பாஜக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று ஈரோடு வருகிறார். ஈரோடு கங்காபுரத்தில் உள்ளடெக்ஸ்வேலியில் நடக்கும் நெசவாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்கிறார். அதைத்தொடர்ந்து பெருந்துறை சாலை ஸ்ரீநகரில் ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் அமித்ஷா கலந்துரையாடுகிறார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக பொதுச்செயலாளர் முரளிதர ராவ், தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். அதே நேரத்தில் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத் வேலூருக்கும் ஸ்மிருதி இரானி திருவண்ணாமலைக்கும் இன்று வருகின்றனர். சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நாளை நடக்கும் பாஜக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்கிறார்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, ''வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க அமித்ஷாவும், மத்திய அமைச்சர்களும் தமிழகம் வருகிறார்கள். தமிழகத்தில் பாஜக இடம்பெறும் கூட்டணி மிக வலிமையானதாக இருக்கும். கூட்டணி பேச்சு நல்ல முறையில் நடந்து வருகிறது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட குறைவான விலையிலேயே ரஃபேல் போர் விமானங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் ராகுல் காந்திஉள்ளிட்டோர் கூறியது அவதூறுபிரச்சாரம் என்பது தெளிவாகியுள்ளது'' என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close