[X] Close

ரூ.2000 உதவித்தொகை வழங்கும் திட்டம்: எதிர்த்து வழக்கு நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணை


  • முத்தலீப்
  • Posted: 13 Feb, 2019 16:00 pm
  • அ+ அ-

அரசின் சிறப்பு நிதியுதவி திட்டம் தொடர்பாக பிப்ரவரி 11-ம் தேதி (திங்கட்கிழமை) தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் விதி எண் 110-ன் கீழ் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

அதில் தமிழகம் முழுவதும் 60 லட்சம் ஏழை தொழிலாளர்கள், விவசாயிகள் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி உதவியாக தமிழக அரசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகை இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அரசின் இந்த அறிவிப்பு குறித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில், சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் செந்தில் ஆறுமுகம் ஆஜராகி முறையீடு செய்தார். அப்போது, தமிழக அரசு புள்ளிவிவர அடிப்படையிலேயே, மொத்த மக்கள் தொகையில் 11.9 சதவீதம் பேர் தான் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதாகவும், அதனடிப்படையில் 18 லட்சம் பேர் மட்டுமே பலனடைய தகுதியுடையவர்கள் என குறிப்பிட்டார்.

ஆனால் அரசு கூடுதலாக 38 லட்சம் பேர் பலனடையும் வகையில் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளனர், என குற்றம் சாட்டி, அரசின் அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும், அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார்.

தேவையற்றவர்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்குவதால், பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது, உண்மையாக வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு மட்டுமே சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

செந்தில் ஆறுமுகத்தின் முறையீட்டை கேட்ட நீதிபதிகள், மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close