[X] Close

பாசப்புலிகள் நாங்கள்: 5 ஆண்டுகள் உங்களுக்கு ஆதரவு கருணாஸ் பேச்சு


  • முத்தலீப்
  • Posted: 12 Feb, 2019 16:52 pm
  • அ+ அ-

அதிமுகவுடன் மோதலில் ஈடுபட்டு கடுமையாக விமர்சித்த முக்குலத்தோர் புலிப்படைத்தலைவர் கருணாஸ் தமீமுன் அன்சாரி, தனியரசு ஆகியோருடன் சேர்ந்து செயல்பட்டார். தமிழக காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி பின்னர் கைதும் செய்யப்பட்டார்.

சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொடுத்தார். பின்னர் திடீரென அதை வாபஸ் வாங்கினார், முதல்வரைச் சந்தித்தார். இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், புலிப்படையாக இருந்தாலும் எந்த படையாக இருந்தாலும் தங்களை எப்போதும் வெல்ல முடியாது என பேசினார்.

அப்போது பேசிய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், இந்த முக்குலத்து புலிகள் பாசப்புலிகள் ஐந்தாண்டுகள் தன்னுடைய ஆதரவு அதிமுக அரசுக்குதான் என்று தெரிவித்தார்.

பின்னர் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: அரசு சார்பாக தொகுதிக்கு வழங்கக்கூடிய நிதியைத் தவிர்த்து, துறை அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தொகுதிக்கு ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும்.

அடுத்து 7-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை வெறும் முத்துராமலிங்கம் என்ப பதிவு செய்யப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டபோது அதற்கு அமைச்சர் செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்தார்.

பிரதமர் மோடி, வங்க முதல்வர் மம்தா, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் இப்படி பலரும் அவர்களது பெயருக்கு பின்னால் அவர்கள் சமூக பெயரை இணைத்துத்தான் பதிவு செய்துள்ளனர். முத்துராமலிங்கத்தேவரும் அப்படித்தான் பதிவு செய்துள்ளார்ர், ஆகவே அப்படித்தான் பதிவு செய்யவேண்டும் என்று பேசினேன்.

அப்போது நான் சொன்ன பதில் இந்த ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் எனக்கு இல்லை, அப்படி இருந்தால் நான் கூவத்தூருக்கு சென்றிருக்கமாட்டேன், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சி 5 ஆண்டு நீடிக்கவேண்டும் என்று நினைக்கிற உங்களைப்போல் நானும் ஒருவனாகத்தான் இருக்கிறேன்.

மீண்டும் நான் தேர்தலில் போட்டியிடுவேனா, அரசியலில் இருப்பேனா எனக்கு தெரியாது. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட நான் ஐந்தாண்டு இந்த ஆட்சி நீடிக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னால் இந்த ஆட்சிக்கு எந்த பாதகமும் ஏற்படாது என்று பேசினேன்.

புலிப்படை அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றிக்கொள்கிறதா?

நான் இப்போது ஒரு பேச்சு அப்போது ஒருப்பேச்சு என மாற்றிக்கொள்பவன் அல்ல. நான் இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்றவன். நான் இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தால் பதவி போகும். ஏற்கெனவே நான் பதவியை துறக்க நினைத்தேன். ஆனால் எதற்கு இந்தப்பதவியை விடவேண்டும் இருக்கும்வரை செயல்படுவோம் நம்மால் இயன்றதை மக்களுக்கு செய்யவேண்டும் என்று முடிவு செய்தேன்.

ஆகவே சமுதாய மக்களுக்கு நல்லது செய்யவேண்டும். அதற்கு யார் உதவுகிறார்களோ அவர்களுடன் சேர தயங்க மாட்டேன். ஆனால் அதே விமர்சனங்கள் அப்படியேத்தான் உள்ளன. நாளை இந்த நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலையில் நின்று வென்ற நான் எதிர்த்து பேச முடியுமா? நான் அவர்களை ஆதரித்து போகப்போகிறேன் போகப்போவதில்லை அது அடுத்து ஆனால் எதிர்த்து பேச முடியுமா?

இவ்வாறு அவர் பேசினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close