[X] Close

இயல்பான உணவுப் பழக்கத்துக்கு மாறும் ரோகிணி


rohini-turns-into-a-natural-diet

  • kamadenu
  • Posted: 11 Feb, 2019 13:54 pm
  • அ+ அ-

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் தனியார் தோட்டத்தில் வனத்துறையினரின் முறையான அனுமதியின்றி, சட்ட விரோதமாக வளர்க்கப்பட்ட 22 வயதுடைய ரோகிணி என்ற பெண் யானை, நீதிமன்ற உத்தரவுப்படி வனத்துறையினரால் மீட்கப்பட்டது. பின்பு டிசம்பர் 14-ம் தேதி ஆனைமலை புலிகள் காப்பகத்தின் ஆனைமலை பண்ணை அலுவலகத்தில் இந்த யானை ஒப்படைக்கப்பட்டது.

தனியாரால் வளர்க்கப்பட்ட யானை என்பதால் அதன் உடல்நிலை, நோய் தொற்று ஏதேனும் உள்ளதா என கண்டறிய வன கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையில் மருத்துவ குழுவினரால் யானையின் சாணம், ரத்தம், சிறுநீர் உள்ளிட்டவற்றின் மாதிரி எடுக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவுக்கு பின்னர், டாப்சிலிப் யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று பராமரிக்க வனத்துறையினர் திட்டமிடப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த இரு மாதங்களில் உடல் எடை குறைந்து யானை இளைத்து வருகிறது.

இது குறித்து வனஉயிரின ஆர்வலர்கள் கூறும்போது, நீதிமன்ற உத்தரவுப்படி ஆனைமலை வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட ரோகிணி யானைக்கு தினமும் வழங்கப்பட்டு வரும் ராகி களி, தென்னை ஓலைகள் உள்ளிட்ட உணவுகள் போதுமானதாக இல்லை, தீவனம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் யானை நாளுக்கு நாள் இளைத்து வருகிறது. யானையின் நலன் கருதி அதனை யானைகள் முகாமுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றனர்.

இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் மாரிமுத்து கூறும்போது, ‘‘ரோகிணி யானை கோயிலில் வளர்க்கப்பட்டதால், அதன் இயல்புக்கு எதிரான பொங்கல், அரிசி உள்ளிட்ட மனிதர்கள் உண்ணும் உணவுகள் வழங்கி வளர்க்கப்பட்டு வந்துள்ளது. தற்போது தென்னை ஓலை, சோளத்தட்டுகள், கரும்பு மற்றும் தாவர உணவுகளுடன், சத்தான ராகி களி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தான் யானை இளைத்துள்ளது.

உணவுப் பழக்கங்கள் மாறும் போது யானை இளைப்பது இயல்புதான். உணவுப் பற்றாக்குறை ஏதும் கிடையாது. அருகில் உள்ள விவசாயிகள் யானைக்கு தேவையான தென்னை ஓலைகளையும், யானையைப் பார்க்க வரும் பொதுமக்கள் வாழைப் பழங்களையும் வழங்கி வருகின்றனர். மருத்துவப் பரிசோதனை முடிவுக்குப் பிறகு யானை முகாமில் சேர்த்துக்கொள்ளப்படும்,’’ என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close