[X] Close

20 ஆண்டுகளாக விபத்து இன்றி ஓட்டிய அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்: அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வழங்கினார்


government-bus-drivers

விபத்துகள் இன்றி அரசு பேருந்துகளை இயக்கிய ஓட்டுநர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ. உடன் மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் உள்ளிட்டோர். படம்:ஆர்.அசோக்

  • kamadenu
  • Posted: 11 Feb, 2019 12:27 pm
  • அ+ அ-

கடந்த 20 ஆண்டுகளாக விபத்துகள் இன்றி அரசு பேருந்துகளை இயக்கிய ஓட்டுநர்கள் 60 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.

மதுரையில் கடந்த 4-ம் தேதி முதல் நேற்று வரை தேசிய சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது. இதையொட்டி மதுரையில் தினமும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மதுரை நகர் போக்குவரத்து காவல் துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

சாலை பாதுகாப்பு வார விழா வின் நிறைவு விழா மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் நேற்று நடந்தது. கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண் டார்.

கடந்த 20 ஆண்டுகளாக விபத்துகள் இன்றி அரசு பேருந்துகளை இயக்கிய ஓட்டுநர்கள் 60 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் களை வழங்கி பேசினார். இதைத் தொடர்ந்து ஹெல்மெட் விழிப்பு ணர்வு பேரணி ஒன்றையும் அமைச் சர் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:தற்போதைய நிதி நெருக்கடியி லும், விபத்துகளை தடுக்க,தமிழக அரசு நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.13,650 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளன. தமிழகத்தின் தலைநகர் சென்னையாக இருந்தாலும், எய்ம்ஸ் போன்ற உயர்தர மருத்துவமனை அமையும் சூழலில் மதுரை 2-வது மருத்துவ தலைநகராக மாறி வருகிறது என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close