[X] Close

தமிழகத்தில் இதுவரை 1,513 போலி மருத்துவர்கள் கைது; அனைத்து மருத்துவ நிறுவனங்களும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்: சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு


fake-doctors-arrested-in-tamil-nadu

தமிழ்நாடு மருத்துவமனை நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டம், 1997 மற்றும் அதனைச் சார்ந்த விதிகள் 2018-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட மருத்துவ நிறுவனங்களுக்கு பதிவு சான்றிதழ்கள் வழங்கி, பதிவு சான்றிதழ் கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்தும் வசதியை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். உடன் சுகாதாரத்துறை முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, ஐஓபி மேலாண் இயக்குநர் சுப்பிரமணியக் குமார் உள்ளிட்டோர்.

  • kamadenu
  • Posted: 08 Feb, 2019 11:07 am
  • அ+ அ-

தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் மருத்துவ நிறுவனங்கள் மார்ச் 31-க்குள் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் இதுவரை 1,513 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழ்நாடு மருத்துவமனை நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட மருத்துவ நிறுவனங்களுக்கு பதிவுச் சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் பதிவுச் சான்றிதழ் பெற ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்தும் வசதியை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் பேசியதாவது:தமிழகத்தில் தற்போது செயல்படும் மருத்துவமனைகள் பற்றிய விவரங்கள், மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் எண்ணிக்கை, அளிக்கப்படும் சிகிச்சை, அங்குள்ள வசதிகள் உள்ளிட்டவை குறித்த விவரங்களைப் பெறவும், மருத்துவமனைகள் பராமரிக்க வேண்டிய குறைந்த அளவு வசதிகள், மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் எண்ணிக்கை, சிகிச்சையின் தரம் போன்றவற்றை நிர்ணயிக்கும் விதமாக, தமிழகத்தில் தனியார்மருத்துவமனைகளை முறைப்படுத்த தமிழக அரசால் கடந்த 1997-ம் ஆண்டு தனியார் மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்தும் சட்டம் இயற்றப்பட்டது. எனினும் விதிகள் வகுக்கப் படாததால் செயல்பாட்டுக்கு வரவில்லை.

மருத்துவ நிறுவனங்கள் பதிவு செய்தல் மற்றும் முறைப்படுத்தும் சட்டத்தை 2010-ல் மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த இரண்டு சட்டங்களையும் வல்லுநர் குழு மூலம் ஆய்வு செய்து, மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச் 22-ம் தேதிசட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டது. கடந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் இந்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அறிவிக்கையும் வெளி யிடப்பட்டது.

இச்சட்டத்தின்படி அனைத்துமருத்துவ நிறுவனங்களும் பதிவு செய்வது கட்டாயமாக் கப்பட்டுள்ளது. அரசு, தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் மருத்துவ நிறுவனங்கள் இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் பதிவு பெறுதல் அவசியமாக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கிளைகளான அலோபதி, ஆயுஷ், பல் மருத்துவம், ஆய்வுக்கூடங்கள், நுண்கதிர் பிரிவு போன்ற அனைத்து செயல்பாடுகளும் பதிவு செய்யப்பட்டு பதிவுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த பதிவுச் சான்றிதழை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். பதிவுச் சான்றிதழில் நிறுவன உரிமையாளர், பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உள் ளிட்டோர் விவரங்கள் பதியப்படும். பதிவு கோரும் மருத்துவ நிறுவனங் கள் ஆன்லைன் மூலம் ரூ.5 ஆயிரம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பத்தை ‘clinicalestablishmentact.gov.in’ என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்தபின், தீய ணைப்புத் துறைச் சான்று, மாசுகட்டுப்பாட்டு வாரிய சான்று, மருத்துவக் கழிவு மேலாண்மைச் சான்றிதழ், கட்டிட உறுதித் தன்மைச் சான்றிதழ், கட்டிட அனு மதிச் சான்றிதழ்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தச் சட்டத்தின் கீழ் அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைனில் பெறப்பட்டு, மருத் துவம் ஊரகப்பணிகள் இணை இயக்குநரால் நேரில் ஆய்வு செய்யப்பட்டு, அதன்பின் பதிவு செய்யப்படும். ஏற்கெனவே செயல்பட்டு வரும் நிறுவனங்கள் அறிவிக்கை நாளில் இருந்து 9 மாதத்துக்குள்ளும், புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்ட 6 மாதத்துக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.

விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு தண்டணை வழங்கவும் சட்டத்தில் வழி உள்ளது.

இச்சட்டத்தின் மூலம் போலி மருத்துவர்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளனர். தமிழ கத்தில் இதுவரை 1,513 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத் திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, ஐஓபி மேலாண் இயக்குநர் சுப்பிரமணியக்குமார், மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் இயக்குநர் ருக்மணி, பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி, மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின்ஜோ உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close