[X] Close

அரசமைப்பு சாசன பதவிகளை கைப்பற்ற ஆர்எஸ்எஸ் முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு


rahul-gandhi-speech

  • kamadenu
  • Posted: 08 Feb, 2019 09:27 am
  • அ+ அ-

நீதித் துறை முதல் தேர்தல் ஆணையம் வரை அரசமைப்பு சாசன பதவிகளைக் கைப்பற்ற ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற தேசிய மாநாட்டில் அவர்பேசியதாவது:

நாட்டின் அரசமைப்பு சாசன அமைப்புகள் எந்த கட்சிக்கும் சொந்தமானது கிடையாது. ஆனால்நீதித் துறை முதல் தேர்தல் ஆணையம் வரை அரசமைப்பு சாசனத்தின் முக்கிய பதவிகளைக் கைப்பற்ற ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையிடம் மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ளது. அங்கிருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் மத்திய அரசு ஆட்டுவிக்கப்படுகிறது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக 10 நிமிட விவாதத்துக்கு தயாரா என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டேன். ஆனால்அவர் சவாலை ஏற்க மறுக்கிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்துக்கு வழிவகை செய்யப்படும். அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும். விவசாயிகள் பிரச்சினை, ஊழல் தடுப்பு, நாட்டின் பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தோல்வி அடைந்துள்ளது. நாட்டை துண்டாட பாஜக முயற்சிக்கிறது. வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பை காங்கிரஸ் தோற்கடிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close