[X] Close

புதுச்சேரியில் கலால் வரி உயர்வால் மதுபானம் விலை உயர்கிறது


liquor-price-hike

  • kamadenu
  • Posted: 08 Feb, 2019 09:26 am
  • அ+ அ-

கலால் வரி உயர்வால் புதுச்சேரியில் சில மது வகைகளின் விலை உயர்கிறது. இதனால் அரசுக்கு மாதம் ரூ.2 கோடி வருவாய் அதிகரிக்கும்.

கடும் நிதி நெருக்கடியை சமாளிக்க புதுச்சேரி அரசு வருவாயை உயர்த்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2017-க்கு பிறகு புதுச்சேரி அரசு, தற்போது கலால் வரியை உயர்த்தியுள்ளது. மாநிலத்தில் ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், பீர்,ஓட்கா என மொத்தம் 1,300-க்கும் மேற்பட்ட மது வகைகள் விற்பனையாகின்றன. உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகள் (விஸ்கி, ரம், பிராந்தி) விலை குறைவானது, சாதாரணமானது, நடுத்தரமானது, விலை உயர்ந்தது என 4 பிரிவுகளில் இருக்கும்.

இதில் ஒரு கேஸுக்கு ரூ.399 வரை விலையுள்ள மது வகைகளுக்கு கலால் வரியை கடந்த 2017-ல் ரூ.68-ல் இருந்து ரூ.75-ஆக அரசு மாற்றியமைத்திருந்தது. தற்போது இவ்வரி ரூ.75-ல் இருந்து ரூ.93-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் நடுத்தரமான, விலை உயர்ந்த பிரிவுகள் இரண்டையும் ஒருங்கிணைத்து ரூ.400 முதல் ரூ.600-க்கு மேலானமதுக்களுக்கு இருந்த கலால் வரி ரூ.100-ல் இருந்து ரூ.110-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வரி உயர்வு தொடர்பாக கலால்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "சில பிராண்டுகளில் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாதத்துக்கு ரூ.2 கோடி வரி வருவாய் அதிகரிக்கும்" என்றனர். "கலால்துறை வரி உயர்வு காரணமாக புதுச்சேரி மதுபான விலை மீண்டும் உயர்த்தப்படும்" என்று மதுபானக் கடை தரப்பில் தெரிவித்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close