[X] Close

அண்ணாசாலையில் டாஸ்மாக் பார் சமையல் மாஸ்டர் கொலை: ஊழியரை தேடும் போலீஸ்


  • முத்தலீப்
  • Posted: 07 Feb, 2019 21:20 pm
  • அ+ அ-

சென்னை அண்ணா சாலை பழைய ஆனந்த் திரையரங்கம் அருகில் பிரதான சாலையில் டாஸ்மாக் பார் உள்ளது. இங்கு இன்று காலை வாசலில் ஒருவர் பிணமாக கிடப்பதைப்பார்த்த அவ்வழியே வந்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஆயிரம் விளக்கு போலீஸார் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் அவர் உடல் கிடந்த டாஸ்மாக் கடையை ஒட்டிய பாரில் சமையல் மாஸ்டராக வேலை செய்த புதுக்கோட்டை மாவட்டம், பென்னாகரத்தைச் சேர்ந்த வள்ளியப்பன் (42) என தெரியவந்தது.

போலீஸார் மேலும் நடத்திய விசாரணையில் அவரது கழுத்து நயிலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் உடன் வேலைச் செய்யும் அஸ்ஸாமைச் சேர்ந்த சாமன் உசேன் (36) என்பவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. வள்ளியப்பனுக்கும், சாமன் உசேனுக்கும் வேலை செய்வதில் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

சமையல் மாஸ்டரான வள்ளியப்பன் சாமன் உசேனுக்கு சரியாக சாப்பாடு தர மறுத்ததாகவும் இதில் இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. நேற்றிரவு இருவருக்கும் மோதல் ஏற்பட்டு நைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

தலைமறைவாக உள்ள சாமன் உசேனை தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால்தான் உண்மை தெரியவரும்.  

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close