[X] Close

காட்டு யானை முகாமிட்ட குட்டையை மூடியதால் தங்க இடமின்றி தவிக்கும் ‘சின்னதம்பி’


chinna-thambi

உடுமலை அருகே சர்க்கரை ஆலை வளாகத்தில் தென்னந்தோப்பில் இளைப்பாறிய காட்டுயானை சின்னதம்பி. படம்: எம்.நாகராஜன்

  • kamadenu
  • Posted: 07 Feb, 2019 08:02 am
  • அ+ அ-

உடுமலை அருகே காட்டு யானை சின்னதம்பி முகாமிட்ட குட்டையை சர்க்கரை ஆலை நிர்வாகம் மூடி யதால், யானை தங்க இடமின்றி நெல் வயல்களுக்குள் புகுந்து தவித்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை யில் இருந்து சுமார் 15 கிமீ தொலை வில் அமராவதி சர்க்கரை ஆலை வளாகம் உள்ளது. ஆலைக்கு சொந் தமான பண்ணையில் கடந்த 5 நாட்களாக சின்னதம்பி என்று அழைக்கப்படும் காட்டு யானை முகாமிட்டுள்ளது. அங்குள்ள கழிவு நீர் குட்டையில் படுத்து உறங்கி வந்தது.

நேற்று முன்தினம் குட்டையில் இருந்து யானை வெளியே வந்த தும், சர்க்கரை ஆலை நிர்வாகம் ஜேசிபி மூலம் குட்டையில் இருந்த முட்புதர்களை அகற்றி, குட்டையை சமன் செய்தது. மீண்டும் குட்டைக்கு வந்த சின்னதம்பி தங்க இடம் இன்றி தவித்தது. இதையடுத்து, பண்ணையை ஒட்டிய தென்னந் தோப்பிலும், அருகில் உள்ள வேலி முள் புதருக்குள்ளும் சென்று ஓய்வெடுத்தது. பிறகு வேறு வழி யின்றி அருகில் உள்ள நெல் வயலுக்குள் சென்றுவிட்டு மீண்டும் கும்கிகள் இருந்த இடத்துக்கே வந்தது.

இதற்கிடையே ஆலை ஊழியர் கள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகி கள் கூறும்போது, ‘சில நாட்களாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது. பண்ணை யில் முகாமிட்டுள்ள யானையை விரட்ட வேண்டும்’’ என்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close